

சூடிக்கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்களைக் குறித்து டாக்டர் மைத்ரேயன் `இந்து தமிழ்’ நாளிதழில் எழுதிய விளக்கங்களின் தொகுப்பு இது.
பன்னிரு ஆழ்வார்களில் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத புகழுக்கு உரியவர் ஆண்டாள். அவர் வகுத்த நெறிகளே நோன்புக்கான இலக்கணமாக இன்றளவும் பின்பற்றப்பட்டுவருகின்றன. `பாவை முப்பது’ எனும் இந்நூலில் 30 பாசுரங்களுக்கான விளக்கம் உள்ளது. 26-ம் பாசுரத்தில் நோன்புக்காக என்னென்ன விஷயங்கள் வேண்டும் என்பது பட்டியலிடப்படுகிறது.
வெண்சங்கு வேண்டும் என்று நேரடியாகக் கேட்காமல் தனது ஒலி முழக்கத்தின் மூலம் உலகைக் கதிகலங்கச் செய்கிற உனது பாஞ்ச சன்னியம் போன்ற வெண்சங்குகள் என வெண்சங்கைச் சிறப்பித்துச் சொல்கின்றனர். இப்பாடலில் வரும் பறை என்பது தோல் கருவி. அதன்மேல் கோல் கொண்டு அடித்தால் ஓசை வரும். தவிரவும், வாழ்த்துப் பாடுவதற்குரிய இசை வாணர்களும், விளக்கும், கொடியும், விதானமும் வேண்டும் என்று கேட்கின்றனர்.
பாவை முப்பது
டாக்டர் வா.மைத்ரேயன்,
வைணவன் குரல் பப்ளிகேஷன்ஸ், பிரைவேட் லிமிடெட்,
கைபேசி: 9444612088, 044-24745051.
ரூ.100/-