

வசீகரமான பேச்சால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் ரோகிணி நட்சத்திர அன்பர்களே!
இந்தப் புத்தாண்டில் எதையும் ஆராய்ந்து அதன் பிறகே அதில் ஈடுபடுவது நன்மை தரும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். காரிய அனுகூலங்களும் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
வீடு, வாகனங்கள் தொடர்பான செலவு ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். லாபம் கூடும். பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளால் டென்ஷன் அடைவார்கள். எதிர்பார்த்தபடி சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சில்லறை சண்டைகளும், பூசல்களும் இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகும்.
உறவினர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு வேலையில் ஈடுபட்டாலும் அதுபற்றி ஒருமுறைக்கு பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. துணிச்சல் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு போட்டிகள் நீங்கும். உங்களுக்கு பக்கபலமாக ஒருவரது உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு வாழ்க்கைத் தரம் உயர எடுக்கும் முயற்சிகள் கை கூடும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையுடன் பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி மேற்கொள்வீர்கள்.
+: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்
-: நண்பர்கள் - உறவினர்களுடன் கருத்து வேற்றுமை
பரிகாரம்: அருகிலுள்ள அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு அரளிமாலை சார்த்துங்கள். எலுமிச்சை தீபமேற்றுங்கள். மனதிருப்தி கிடைக்கும். இன்னல்கள் அகலும். இன்பங்கள் பெருகும்.
மதிப்பெண்கள்: 64%