

கொடுத்த வேலையை சரியான முறையில் முடிக்கும் திறன் படைத்த விசாக நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணிகளை சிரமமின்றி செய்து முடிப்பார்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். பிள்ளைகளுக்குத் தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கி கொடுப்பீர்கள். பெண்கள், கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்தி தரும். காரிய அனுகூலம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள்.
+: அனைவரிடத்திலும் உறவு சுமூகமாக இருக்கும்.
-: சோம்பல் அதிகரிக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். குறிப்பாக, வியாழக்கிழமைகளில் தவறாமல் தரிசனம் செய்யுங்கள். கொண்டக்கடலை மாலை அணிவித்து பிரார்த்தனை செய்யுங்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.
மதிப்பெண்கள்: 76%