

குணத்திலும் நடவடிக்கையிலும் அடிக்கடி மாற்றங்களுடன் தோற்றமளிக்கும் சுவாதி நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் பணத்தேவை அதிகரிக்கும். வீண்செலவு, மனஅமைதி பாதித்தல் ஆகியவை இருக்கும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாய்க்கு ருசியாக உணவு உண்பீர்கள். காரிய தாமதம், உடல் சோர்வு, வீண் பகை போன்றவை ஏற்படலாம்.
உங்களைக் கண்டு பலரும் பொறாமைபடக்கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவீர்கள்.
குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே கோபமான பேச்சை விடுத்து அமைதியாக எதையும் எடுத்துச் சொல்வது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். பெண்களுக்கு மனஅமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை இருக்கும். திடீர் செலவு உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.
கலைத்துறையினர் விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். அரசியல்வாதிகளுக்கு வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். மாணவர்கள் பாடங்களை மிகவும் கவனமாகப் படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். சக மாணவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
+: முயற்சிகள் வெற்றி தரும்
-: தந்தை வழி உறவினர்களுடன் மனக்கிலேசம் ஏற்படலாம்.
பரிகாரம்: நரசிம்மரை தரிசித்து அர்ச்சனை செய்யுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். பானக நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குங்கள். எதிர்ப்புகள் அகலும். எல்லா நலனும் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 80%