

உலக மக்கள் அனைவரும் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சதய நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் துன்பம் வருவது போல் இருக்குமே தவிர, வராது. மனதில் ஏதேனும் கவலை, பயம் அவ்வப்போது ஏற்படும். உங்களது பேச்சே உங்களுக்கு எதிர்ப்பை உண்டாக்கலாம். யோசித்து பேசுவது நல்லது.
ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் மூலம் வர வேண்டிய லாபம் தாமதப்படும். எதிர்பார்த்த நிதியுதவி ஓரளவு கிடைக்கும். ஆர்டர்களுக்காக இருந்த அலைச்சல் குறையும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பம் இல்லாத மாற்றம் வரலாம். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.
பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் வரை அந்த காரியம் முடியுமோ, முடியாதோ என்ற மனக் கவலை இருக்கும். வீண் அலைச்சல் குறையும். கலைத்துறையினருக்கு சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு செயல்திறமை கூடும். பயணங்களும் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவது பற்றிய மனக்கவலை இருக்கும். சகமாணவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
+: லாபம் அதிகரிக்கும்
-: எதிர்பார்த்த நிதி குறையலாம்.
பரிகாரம்: ஸ்ரீதுர்கைக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்குங்கள். எலுமிச்சை தீபம் ஏற்றுங்கள். ராகுகால வேளையில் துர்கையை வழிபடுவது இன்னும் சிறப்பு. எல்லாக் கஷ்டங்களும் நீங்கும். மன நிம்மதி உண்டாகும்.
மதிப்பெண்கள்: 75%