

வேகமான நடவடிக்கைகளால் எடுக்கும் காரியங்களில் லாபம் ஈட்டும் அவிட்ட நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் அடுத்தவருடன் ஏற்படும் பிரச்சினைகளிலும் வாக்குவாதத்திலும் வெற்றியே கிடைக்கும். பணவரவும் கூடும். ஆனால் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அடுத்தவரை நம்புவதில் எச்சரிக்கை தேவை. உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
மாற்று மதத்தினரின் உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும் புதிய முயற்சிகளில் ஈடுபடத் தோன்றும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்யும் பணிகள் திருப்திகரமாக நடந்து முடியும். எதிர்பார்த்த இடமாற்றம் வரலாம்.
குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வது மனதுக்கு இதமாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறிய வாக்குவாதம் ஏற்படலாம். பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொண்டு நடப்பது மனதுக்கு நிம்மதியைத் தரும்.
பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு சனியின் சஞ்சாரம் யோகஸ்தானத்தில் இருப்பதால் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும்.
அரசியல்வாதிகளுக்கு மனம் வருந்தும்படியான சூழ்நிலை ஏற்படும். நிதானத்தைக் கடைபிடிப்பது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் விலகும். பாடங்களைப் படிப்பதில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
+: போட்டிகள் குறையும்
-: இடமாற்றம் ஏற்படும்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணரை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். மன மகிழ்ச்சி உண்டாகும். மாதந்தோறும் வருகிற ரோகிணி நட்சத்திர நாளில், கிருஷ்ண பகவானை வணங்குங்கள். வளமும் நலமும் நிச்சயம்.
மதிப்பெண்கள்: 79%