2019: உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்

2019: உத்திரட்டாதி நட்சத்திரத்துக்கான பலன்கள்
Updated on
1 min read

குறுக்கு வழியைப் பின்பற்றாமல் நேர்வழியைப் பின்பற்றி  வாழ்க்கையில் வெற்றி பெறும் உத்திரட்டாதி நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் பணவரவு கூடும். ஆன்மிகச் செலவு  உண்டாகும். காரியத் தடை, தாமதம் விலகும். ஆனாலும் அந்தக் காரியத்தை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.

அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். வசிக்கும் இடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேறத் தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும்.

உத்தியோகத்தில்  இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர்  புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை  உண்டாகும். புத்திசாதுர்யத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு,  தடைபட்ட காரியங்களில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போதும் வெளியூர்களுக்கு செல்லும் போதும் கூடுதல் கவனம் தேவை.

அரசியல் துறையினர் வளர்ச்சி பெற மிகவும்  கவனமாக  இருப்பது நல்லது. செலவை  குறைப்பதன் மூலம் பணத் தட்டுப்பாடு குறையலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

+: தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்

-: தொழில் போட்டிகள் அதிகரிக்கும்

பரிகாரம்:  நவக்கிரகத்தில் உள்ள சுக்கிரனை பூஜிக்க வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மதிப்பெண்கள்: 85%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in