2019 : பரணி நட்சத்திரத்துக்கான பலன்கள்!

2019 : பரணி நட்சத்திரத்துக்கான பலன்கள்!
Updated on
1 min read

அறிவார்ந்த செயல்களால் அனைத்து காரியங்களையும் செய்யும் பரணி நட்சத்திர அன்பர்களே!

இந்தப் புத்தாண்டில் சுபச்செலவுகள் ஏற்படும். சிந்தித்து செயல்படுவது நன்மை தரும்.  பணவரவு இருக்கும். அடுத்தவர் நலனுக்காக  பாடுபட வேண்டி இருக்கும். பெரியோர் உதவி கிடைக்கும்.

குருவின் சஞ்சாரம் வழக்குகளில் சாதகமான போக்கைத் தரும். நண்பர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பாக பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். பார்ட்னர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது கருத்து வேற்றுமை வராமல் தடுக்கும்.

பிள்ளைகள் நீங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது மனதுக்கு திருப்தியைத் தரும். உறவினர்களுடன் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். மற்றவர்கள் பிரச்சினை தீர பாடுபடுவீர்கள்.

காரியத் தடை, தாமதம் ஏற்படலாம். கலைத்துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள்.

மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். உயர்கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

+: பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும்.

-: வாக்கு கொடுக்கும் முன் யோசித்து செயல்படுங்கள்.

பரிகாரம்:  பவுர்ணமியில் மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும். வீட்டில் விளக்கேற்றி அம்பாள் துதி பாராயணம் செய்யுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள்.

மதிப்பெண்கள்: 85%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in