

கொடுத்த வாக்கினை உயிருக்குச் சமமாக மதிக்கும் பூரட்டாதி நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களது சொத்து தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படும். பக்தியில் நாட்டம் அதிகமாகும்.
நெருங்கிய நண்பர்களிடம் மனஸ்தாபம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பார்ட்னர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு ஏற்பட்டாலும், எப்படியாவது செய்து முடித்து விடுவார்கள். சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் இருக்கும்.
குடும்பத்தில் இருப்பவர்களுடன் ஏதாவது ஒருவகையில் வாக்குவாதம் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபம் உண்டாகும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படலாம். வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.
பெண்கள் அடுத்தவர்களிடம் பேசும்போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. பணவரவு தாமதம் அடையும். கலைத்துறையினர் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில திட்டங்களை ஆலோசிப்பீர்கள்.
அரசியல்வாதிகள் மேலிடத்திற்கு பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் பின்தங்கிய நிலை மாற கூடுதல் கவனத்துடன் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம்.
+: வீண் கவலை அகலும்
-: பணவரவில் தாமதம் ஏற்படலாம்.
பரிகாரம்: முருகனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். சஷ்டி, கிருத்திகையில் முருக தரிசனம் செய்யுங்கள். முக்கியமான நாட்களில் செந்நிற மலர்கள் சார்த்துங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். வாழ்க்கையும் இனிக்கும்.
மதிப்பெண்கள்: 87%