2019: மூலம் நட்சத்திரத்துக்கான பலன்கள்

2019: மூலம் நட்சத்திரத்துக்கான பலன்கள்
Updated on
1 min read

அனைத்து விஷயங்களிலும் நேர்மையும் நிதானமும் ஒழுக்கமும் கொண்டு வாழ்வில் முன்னேறும் மூல நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனக்குழப்பம் உண்டாகலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சின்னச்சின்ன சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம்.  பணவரத்து இருக்கும்.

பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன்  வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். பெண்களுக்கு காரியத் தடையால் மனக்குழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரவு இருக்கும்.

கலைத்துறையினருக்கு சுக்கிரனின் சஞ்சாரம் எதிர்பாராத நல்ல திருப்பங்களை ஏற்படுத்தும். மனதில் சந்தோஷம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். ஒப்பந்தங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முனனேற்றத்திற்கு உதவும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்துச் செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும்.

+: தொழில் - உத்தியோகம் சிறப்பாக இருக்கும்

-: குடும்பத்தில் சலசலப்பு ஏற்படலாம்.

பரிகாரம்: சித்தர்களை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்ப ஒற்றுமை ஏற்படும். சித்தர்களின் ஜீவசமாதிகளிலும் பிருந்தாவனங்களிலும் அதிஷ்டானங்களிலும் சிறிது நேரம் கண்மூடி அமர்ந்திருங்கள். புத்தியில் தெளிவு ஏற்படும். காரியத்தில் வெற்றி நிச்சயம்.

மதிப்பெண்கள்: 65%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in