Published : 31 Dec 2018 07:21 PM
Last Updated : 31 Dec 2018 07:21 PM

2019: ஆயில்யம் நட்சத்திரத்துக்கான பலன்கள்!

கொண்ட நிலைப்பாட்டில் உறுதியுடன் இருக்கும் ஆயில்ய நட்சத்திர அன்பர்களே!

நீங்கள் இளகிய மனம் கொண்டவர். இந்த புத்தாண்டு பலவித நல்ல பலன்களை தர உள்ளது. எதிர்பார்த்தபடி காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். பணவரவு இருக்கும். நன்மைகள் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும்.  மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. காரியத்தில் முழுமூச்சுடன் செயலாற்றுவீர்கள்.

தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக  இருந்த குடும்பம் தொடர்பான  பிரச்சினைகள் சாதகமாக முடியும்.

கணவன், மனைவிக்கிøடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பெண்களுக்கு பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் துணிச்சல் ஏற்படும்.

அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

+: பணவரவு நன்றாக இருக்கும்.

-: குடும்பத்தில் வீண் வாக்குவாதம் ஏற்படலாம்.

பரிகாரம்: அருகிலுள்ள சிவன் ஆலயத்தில் இருக்கும் நாகதேவதையை தரிசனம் செய்வது மன அமைதியைத் தரும். சிவாலயங்களில் உள்ள நவக்கிரகத்தில் அமைந்துள்ள ராகுகேதுவுக்கு உரிய வஸ்திரம் சார்த்தலாம். நைவேத்தியம் செய்து வழிபடலாம். அருகில் பாம்புப்புற்று இருந்தால், அதற்கு பாலூற்றி வழிபடலாம். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

மதிப்பெண்கள்: 86%

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x