2019 : பூரம் நட்சத்திரத்துக்கான பலன்கள்!

2019 : பூரம் நட்சத்திரத்துக்கான பலன்கள்!
Updated on
1 min read

உலக மக்கள் அனைவரையும் தன் மக்களாக பாவிக்கும் மனம் கொண்ட பூர நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் எதிர்பார்த்த பணம் வரும். எதிர்ப்புகள் விலகும். வயிறு கோளாறு ஏற்படும். எந்தக் காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும்.  புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.

பெண்கள், வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு மனக் குழப்பம் நீங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு  கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியைத் தரும்.

+: பணவரவு நன்றாக இருக்கும்

-: இனம் புரியாத பயம் ஏற்படும்.

பரிகாரம்:  சுதர்சனரை வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். சனிக்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று சுதர்சனரை மனதாரப் பிரார்த்தனை செய்யுங்கள். துளசி மாலை சார்த்துங்கள். துன்பமெல்லாம் பறந்தோடும்.

மதிப்பெண்கள்: 76%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in