

தனது வாழ்க்கையையே சேவைக்காக அர்ப்பணிக்கும் ரேவதி நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும்.
எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள்.
வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். குடுமபத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள்.
கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.
பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன்னிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும். அரசியல் துறையினருக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரலாம். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்குக் கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாகப் படிப்பது நல்லது.
+: நிதானம் அதிகரிக்கும்
-: தேவையற்ற வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கலாம்.
பரிகாரம்: முருகனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளும் தீரும். செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் முருகனைத் தரிசியுங்கள். செவ்வரளி மலர் சூட்டுங்கள். சஷ்டி, கிருத்திகை நாளில் தரிசியுங்கள். செல்வச் செழிப்பும், ஆரோக்கியமும் உண்டாகும்.
மதிப்பெண்கள்: 87%