2019: உத்திராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள்

2019: உத்திராடம் நட்சத்திரத்துக்கான பலன்கள்
Updated on
1 min read

அழகாலும் அறிவாலும் அனைவரையும் அன்பில் ஆழ்த்தும் உத்திராட நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் எதிர்ப்புகள் நீங்கும். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகரிப்பது மன மகிழ்ச்சியைத் தரும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சினை தீரும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகப் பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவார்கள். கணவன் மனைவிக்கிடையில் மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான காரியங்களை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும்.

பெண்கள், உங்களது செயல்களுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பணவரத்து கூடும். கலைத்துறையினருக்கு பணவரவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

+: உடல் ஆரோக்கியம் சிறக்கும்

-: அலைச்சல் அதிகரிக்கும்.

பரிகாரம்: சிவனை நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரவு இருக்கும். சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமை, பிரதோஷம், மாத சிவராத்திரி முதலான தருணங்களில் சிவ தரிசனம் செய்யுங்கள். வில்வம் சார்த்துங்கள். பிரதோஷத்தின் போது அபிஷேகப் பொருட்கள் வழங்குங்கள். செயல் திறமை அதிகரிக்கும்.

மதிப்பெண்கள்: 70%

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in