

சொல், செயல், புத்தி ஆகிய அனைத்திலும் தூய்மையைக் கடைப்பிடிக்கும் திருவோண நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது அரிது. சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம். கவனம் தேவை.
தொழில், வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கும் போது தீர ஆலோசித்த பின் முடிவு எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் இருப்பது நன்மை தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கருத்து மோதல் உண்டாகலாம்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் சரியாகும். பிள்ளைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்குவது மற்றும் அவர்களது நலனுக்காக பாடுபட வேண்டியும் இருக்கும்.
பெண்கள் உங்களது கருத்துக்கு சிலர் மாற்று கருத்து கூறலாம். எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது. கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சினை தீரும்.
அரசியல்வாதிகள் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். பிடிவாதத்தை விடுவது நன்மை தரும். மாணவர்கள் எவ்வளவு திறமையாக படித்தாலும் பாடங்கள் கடினமானவை போல தோன்றும். மனதை தளரவிடாமல் படிப்பது வெற்றியை தரும்.
+: முக்கிய முடிவுகள் நல்ல தீர்வாக அமையும்
-: எதிர்பாராத செலவு ஏற்படும்.
பரிகாரம்: சனிக்கிழமையில் சனி பகவானை வணங்கி காகத்திற்கு எள் சாதம் வைத்து வர உடல் ஆரோக்கிய மடையும். வீண் அலைச்சல் குறையும். கடினமான பணிகள் எளிதாக முடியும்.
மதிப்பெண்கள்: 74%