Last Updated : 01 Nov, 2018 11:02 AM

 

Published : 01 Nov 2018 11:02 AM
Last Updated : 01 Nov 2018 11:02 AM

காற்றில் கீதங்கள் 05: ஆதிபராசக்தியின் அம்சமானவளே…

பரதநாட்டியம் என்றால் நாட்டியம் மட்டுமல்ல, இசையும் சேர்ந்ததே. இன்றைக்கு நகரத்தில் நடக்கும் பல நடன நிகழ்ச்சிகளில் பாடலையும் இசையையும் முன்பதிவு செய்து அதற்கு நடனம் ஆடும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. அண்மையில் நடந்த தாமிரபரணி புஷ்கரம் விழாவில் `தாய்நதி தாமிரபரணி’எனும் இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது. தூத்துக்குடியில் சிவாஞ்சலி நாட்டியப் பள்ளியை நடத்தும் நடனமணி எம். உமா மாணிக்கம் இதைத் தயாரித்துள்ளார்.

தாமிரபரணியின் வரலாற்றுப் பெருமை, ஆன்மிக முக்கியத்துவம், புராண ரீதியான பெருமைகளை விரிவாகப் பாட்டின் அடிநாதமாக்கி, அதற்கு இசையமைத்திருக்கிறார் ம. இசக்கியப்பன். பாடல்களை அனுராதா கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சிவகுமார் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுக்கும் இந்தப் பாடல்களைப் பயன்படுத்தும் வகையில் எளிமையான இசையுடன் ஒரு கோலாட்டப் பாடல், உயிர்பன்மைக்கு ஆதாரமாக விளங்கும் இயற்கைத் தாயாக தாமிரபரணியை வர்ணித்து வாழ்த்தும் ஒரு பாடல், நதிகளுக்கெல்லாம் ஆதார ஸ்ருதியாக விளங்கும் தாயாக தாமிரபரணியை வர்ணித்து ஒரு பாடல், நாகரிகத்தின் தொட்டிலான நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபடும் பாவனையில் ஒரு பாடல், இறுதியாக நதியை வழிபடுவது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் நதிக்கரைகளில் எந்தவிதமான குப்பைகளையும் கழிவுகளையும் தங்கவிடாமல் பாதுகாப்பது.

இதை வலியுறுத்தும் வகையில் நதிப்புரங்களின் சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லும் நேர்த்தியுடன் ஒலிக்கிறது `தூய்மையாக்குவோம்’ எனும் பாடல் பொன் நிறத்து புனல் பெருகும் பொருநை நதி…,

பாடல் அனுராதாவின் குரலில் இதமாக ஒலிக்கிறது. இதன் இசையும் செவ்வியல் இசையோடு இருப்பது அந்தப் பாட்டின் தரத்தை உயர்த்துகிறது. அதோடு மகாபாரதம், ராமாயணம், திருவாய்மொழி போன்றவற்றிலும் தாமிபரணியின் புகழ் பாடப்பட்டுள்ளதையும் சுட்டுகிறது.
 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x