Published : 03 Apr 2014 10:00 AM
Last Updated : 03 Apr 2014 10:00 AM

வார ராசி பலன் | 03-04-14 முதல் 09-04-14 வரை - (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷம்

உங்கள் ராசிக்கு 11-ல் சுக்கிரன் உலவுவதாலும் சனி 7-ல் வக்கிரமாக இருப்பதாலும் சனி, ராகு, சுக்கிரன் ஆகியோரை 3-ல் அமர்ந்துள்ள குரு பார்ப்பதாலும் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்களும் தொழில் கூட்டாளிகளும் உதவுவார்கள். எதிரிகளின் கரம் வலுக் குறையும். பயணத்தால் அளவோடு நலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களின் சேர்க்கை நிகழும்.

விருந்து, உபசாரங்களிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். வார நடுப்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்ப நலம் சிறக்கும். நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். புதன் பலம் குறைந்திருப்பதால் வியாபாரிகள் அகலக் கால் வைக்கலாகாது. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 5, 9, திசைகள்: தென்கிழக்கு, தெற்கு,

நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், சிவப்பு, எண்கள்: 6, 9,

பரிகாரம்: ஆதவனை வழிபடவும். துர்கைக்கும், விநாயகருக்கும் அர்ச்சனை செய்வது நல்லது.



ரிஷபம்

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும், 11-ல் சூரியனும் புதனும் உலவுவது சிறப்பாகும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பேச்சில் தெளிவும் திறமையும் வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். வங்கிகள், சேமிப்பு நிறுவனங்கள், கஜானாக்கள் போன்ற பொருள் நடமாட்டமுள்ள இனங்களில் தொடர்புடையவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் தங்கள் நிலை உயரப் பெறுவார்கள். ஆன்மிகவாதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மேடைப் பேச்சாளர்களுக்கும் செல்வாக்கும் மதிப்பும் உயரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு,

நிறங்கள்: பொன் நிறம், நீலம், பச்சை, வெண்மை, எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: கணபதி, முருகனை வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யவும்.



மிதுனம்

சூரியன், புதன், சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரம் அனுகூலமாக இருப்பதால் உங்கள் முயற்சிகள் பலிதமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசு சம்பந்தமான இனங்கள் ஆக்கம் தரும். முக்கியப் பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். பண நடமாட்டம் அதிகரிக்கும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். தந்தையால் அனுகூலம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்ப நலனுக்காகச் செலவு செய்வீர்கள். 4-ல் வக்கிர செவ்வாயும், 5-ல் வக்கிர சனியும் ராகுவும் இருப்பதால் தாய் நலனிலும் மக்கள் நலனிலும் கவனம் தேவைப்படும். வாரப் பின்பகுதியில் குடும்பத்தில் நற்காரியம் நிகழும். விருந்து, உபசாரங்களில் கலந்துகொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5 (இரவு), 9, திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, வடக்கு,

நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன், எண்கள்: 1, 5, 6, 7,

பரிகாரம்: முருகனையும் துர்கையையும், ஆஞ்சநேயரையும் வழிபடவும். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கவும்.



கடகம்

3ல் வக்கிர செவ்வாயும், 4-ல் வக்கிர சனியும், 8-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும் உலவுவதால் எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். மாதர்கள் நலம் பெறுவார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும்.

நிலபுலங்கள் லாபம் தரும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். அறப்பணியாளர்கள் போற்றப்படுவார்கள். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். தாய் நலனில் கவனம் தேவைப்படும். மக்கள் நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்ய வேண்டிவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப். 5 (பகல்), 9, திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு,

நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, எண்கள்: 6, 7, 9,

பரிகாரம்: வியாழக்கிழமை குருவுக்கு முல்லைமலர் மாலை அணிவித்து, பசுந்நெய் தீபமேற்றவும். வெள்ளிக்கிழமை பராசக்தியை வழிபடவும்.



சிம்மம்

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும்,8-ல் புதனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நல்லவர்கள் உறுதுணையாய் இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். புதிய துறைகளில் முதலீடு செய்யச் சந்தர்ப்பம் கூடிவரும். மக்களால் பாக்கியம் உண்டாகும். சுப காரியங்கள் நிகழும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் வந்து சேரும்.

அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் நிலை உயரும். 2-ல் வக்கிர செவ்வாயும், 3-ல் வக்கிர சனியும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும். ராசிநாதன் 8-ல் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. சுக்கிரன் 7-ல் இருப்பதால் வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்துப் போகவும்.

அதிர்ஷ்டமான தேதி: ஏப்ரல் 5, திசைகள்: தென்மேற்கு, வடக்கு, வடகிழக்கு,

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு, புகை நிறம், எண்கள்: 3, 4, 5,

பரிகாரம்: சூரிய வழிபாடு நலம் தரும். ஆதித்யஹ்ருதயம் படிக்கவும். கண் பார்வை இல்லாதவர்களுக்கு உதவி செய்யவும்.



கன்னி

கோசாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படவே செய்யும். எடுத்த காரியத்தில் தடையும் தாமதமும் உண்டாகும். அந்நியரால் பிரச்னைகள் ஏற்படும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபடுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு அவசியம் தேவை. விளையாட்டு விநோதங்களைத் தவிர்ப்பது நல்லது.

வீண்வம்பு வேண்டாம். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் எதிர்ப்புக்கள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவைப்படும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 10, 11-ஆமிடங்களில் உலவும் நிலை அமைவதால் ஓரிரு காரியங்கள் நிறைவேறும். நல்லவர்களது நட்பு நலம் சேர்க்கும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 5, 9, திசைகள்: வடக்கு, வடமேற்கு,

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, எண்கள்: 2, 5, 6,

பரிகாரம்: நவக்கிரகங்களையும் சுற்றி வந்து வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கவும். வாகனங்களில் செல்லும்போது விழிப்புடன் இருக்கவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x