Published : 15 Nov 2018 11:37 AM
Last Updated : 15 Nov 2018 11:37 AM

வார ராசிபலன் நவம்பர் 15 முதல் 21 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். பொருளாதாரத்தில் மேன்மை ஏற்படும். சேமிக்கும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய வர்த்தக ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்குவன்மையால் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாகத் தள்ளிப்போன பதவி உயர்வும் நிலுவைப் பணமும் வரலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும்.

கணவன் மனைவி பரஸ்பரம் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் பலன்தரும்பெண்களுக்கு, பணவரவு திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். கலைத் துறையினர் எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் எதிலும் மெத்தனமாகச் செயல்படுவதை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு உதவும். அரசியல்வாதிகளுக்கு, மனம் மகிழும்படியான சூழ்நிலை உருவாகும். வெளியூர் செல்ல நேரிடும். மாணவர்களுக்கு  சாமர்த்தியமான பேச்சினால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை

எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: நவகிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி வணங்க குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த தடைகள் அனைத்தையும் தகர்ப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர்வதற்காகப் பாடுபடுவீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்களைப் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். அலுவலகத்தில் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். கணவன் மனைவிக்குள் இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக உழைப்பீர்கள். பெண்களுக்கு, உங்களது செயல்களில் பிறர் குறை காண நேரலாம்.

தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். கலைத் துறையினர் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள், முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். மாணவர்களுக்கு செயல் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெறுவதை குறிக்கோளாக கொண்டு செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்

எண்கள்: 1, 6, 9

பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்துச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டிச் செல்லும் போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மந்தமாகக் காணப்பட்டாலும் அமைதி நிலவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும்.

உறவினர்களுடன் அனுசரித்துச் செல்வதும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பதும் வேண்டும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண் மனக்கவலை ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு, உடனிருப்பவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு, சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தைச் சிதறவிடாமல் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்:  வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: நவகிரகங்களை வணங்குவதால் தடைபட்ட காரியம் தடைநீங்கி நடக்கும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் நீங்கும். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பங்குதாரர்களுடன் அனுசரித்துச் செல்ல வேண்டும். உத்தியோகத்தில் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பாடுபடுவீர்கள். கணவன் மனைவிக்குள் வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.

பிள்ளைகளின் கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்குப் பணவரவு அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும்.  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாமர்த்தியமாகப் பேசுவதால் வளர்ச்சி காண்பீர்கள். பெண்களுக்கு, விருப்பம் இல்லாத பயணம் செல்ல நேரிடலாம். மாணவர்களுக்கு  விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, பச்சை

எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: சனிபகவானுக்கு எள் சாதம் நைவேத்தியம் செய்து காகத்திற்கு வைக்க பிணிகள் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் குறிக்கோளை நிறைவேற்ற உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிக்கலாம்.வீண்கவலைகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எல்லாம் நிதானமாக இருக்கும்.  சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில் தாமதம் ஏற்படலாம். போட்டிகள் தலைதூக்கும். உத்தியோகத்தில் கூடுதலான வேலைப் பளுவால் உடல் சோர்வடைவார்கள். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும்.

மனத்தில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் வெளிப்படுத்துவார்கள். கணவன் மனைவிக்குள் இணக்கமான போக்கு காண்பது சிரமம். பெண்களுக்கு வீண்கவலைகள், எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மனத்துக்கு சந்தோஷத்தை அளிக்கும். அரசியல்வாதிகளுக்கு பூர்விகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினை தீரும். காரியங்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய பயம் ஏற்பட்டு நீங்கும். தெளிவாகப் பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: சிவப்பு,நீலம்

எண்கள்: 1, 3

பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வணங்கி வர வீண் அலைச்சல் குறையும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் காரிய வெற்றி கிடைக்கும். நிலுவைப் பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்குவதற்குத் திட்டமிட்ட வாகனம், சொத்துகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் வேலைப்பளு குறைந்து மன மகிழ்ச்சியடைவார்கள். மேலதிகாரிகளின் உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். புதிய வேலைக்கான முயற்சிகளில் சாதகமான போக்கு காணப்படும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உறவினர்கள் வருகை சந்தோஷம் தரும். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, பயணங்களால் நன்மை உண்டாகும். முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத் துறையினர் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்கள் நடத்துவது பற்றிய பேச்சுவார்த்தை வெற்றி அளிக்கும். அரசியல்வாதிகள் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

எண்கள்: 3, 6

பரிகாரம்: முருகனை வணங்கிவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தேவையான நேரத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x