Published : 08 Nov 2018 11:59 AM
Last Updated : 08 Nov 2018 11:59 AM

வார ராசிபலன் நவம்பர் 08 முதல் 14 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு சிறப்பாக இருக்கும். ராசிநாதன் சுக்கிரன் ஆட்சியாக இருப்பது சிறப்பு. எந்த கடினமான சூழ்நிலையையும் சாமர்த்தியமாகச் சமாளிப்பீர்கள். தொழில் ஸ்தானத்தை ராகு அலங்கரிக்க குரு பார்க்கிறார். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண்பகை நீங்கும். தொழில், வியாபாரத்தில் தாமதம் அகலும். குடும்பத்தில் உங்களுக்கான அங்கீகாரம் அதிகரிக்கும். பெண்களுக்கு, கோபத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் காரியங்களைச் சாதகமாகச் செய்து முடிக்க முடியும். கலைத் துறையினருக்கு, சொத்துகளை அடைவதில் தடைகள் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் பதற்றம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி l திசைகள்: மேற்கு, வடமேற்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 3, 6 l பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட சகல நன்மைகளும் உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எடுக்கும் முயற்சிகள் கைகூடும். பேச்சுத் திறமையால் வெற்றி உண்டாகும். ராசியில் குரு சஞ்சாரத்தால் போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களிலும் மனநிறைவு இருக்கும். மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் நீங்கி விருத்தியடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாகப் பழகுவது நல்லது. குடும்பத்தினருடன் வாக்குவாதத்தைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். பெண்களுக்கு, சின்ன விஷயங்கள்கூட மன நிறைவு தரும்படி நடக்கும். கலைத் துறையினருக்கு, யாரையும் பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச்செல்வது நல்லது. அரசியல்வாதிகளுக்கு, எல்லாவித வசதிகளும் உண்டாகும். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, வெள்ளை l எண்கள்: 3, 6, 9 l பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று நவகிரகத்தில் செவ்வாய்க்குத் தீபம் ஏற்றி வணங்க எல்லாக் காரியங்களும் வெற்றிபெறும்.

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் திறமைகள் அதிகரிக்கும். எல்லாவிதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் ஊழியர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு, எதையும் துணிச்சலாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். கலைத் துறையினருக்கு, மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, பயணங்களால் மகிழ்ச்சியும் ஆதாயமும் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற துணிச்சலாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன் l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 3, 6 l பரிகாரம்: அருகிலிருக்கும் விநாயகருக்கு அருகம்புல்லை அர்ப்பணித்து வணங்க நன்மைகள் ஏற்படும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த வேலையையும் நேரத்தில் செய்து முடிப்பீர்கள். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். ராசியில் சஞ்சரிக்கும் கேதுவால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். உத்தியோகப் பயணங்கள் செல்லும்போதும் வாகனங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் ஏதாவது ஒரு வகையில் திடீர்ச் சச்சரவுகள் தோன்றலாம். பெண்கள் யோசித்து செய்யும் வேலைகள் சாதகமாக முடியும். கலைத் துறையினருக்கு, பாராட்டுகள் வரும். அரசியல்வாதிகளுக்கு, நீண்ட நாளாக இருந்த பிரச்சினைகள் விலகும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் l எண்கள்: 3, 5, 6 l பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வரபகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர எல்லாக் காரியங்களும் வெற்றியடையும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சுணங்கிக் கிடந்த காரியங்கள் வேகம்பெறும். அறிவுத்திறன் கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சால் எதிலும் வெற்றி காண்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். வீடு, மனை வாங்குவதற்கு இருந்த தடைகள் நீங்கும். மற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது வீண் பிரச்சினை வராமல் தடுக்கும். குடும்பத்தில் எதையும் மனம்விட்டுப் பேசியபிறகு எதையும் செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாகக் கோபத்தைக் குறைப்பது நல்லது. பெண்களுக்கு, அறிவுபூர்வமாகச் செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கலைத் துறையினருக்கு, பாதுகாப்பு அவசியம். அரசியல்வாதிகளுக்கு, உறுதியும் துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: நீலம், மஞ்சள் l எண்கள்: 2, 3, 6 l பரிகாரம்: நவக்கிரகத் தைத் தீபம் ஏற்றி வழிபட காரிய வெற்றி உண்டாகும். தடை தாமதம் நீங்கும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் அனைத்து கிரக சஞ்சாரமும் சாதகம் தரும் வகையில் இருக்கிறது. பொருள் சேர்க்கை உண்டாகும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். செவ்வாய் சஞ்சாரம் இடமாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்த காரியம் தாமதப்படுவது தொடர்பான கவலை வேண்டாம். இரவில் நீண்ட நேரம் கண்விழிக்க வேண்டி வரலாம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிடக் குறைவான லாபம் இருக்கும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் மன வருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் மேம்படும். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத் துறையினருக்கு, வெளிநாட்டு வாய்ப்புகள் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு, கடமைகளைச் சரிவரச் செய்தால் நன்மைகள் அதிகமாகக் கிடைக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றிபெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, சிவப்பு l எண்கள்: 1, 3, 9 l பரிகாரம்: நவக்கிரக குருவை வியாழக்கிழமையில் வணங்கி வர வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x