

துலாம் ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் கேதுவும் 11-ல் சூரியனும் புதனும் சஞ்சரிப்பதால் தெய்வப் பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதிய பதவி, பட்டங்கள் வந்து சேரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டுவார்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு கூடும். நண்பர்கள், உறவினர்களது தொடர்பு பயன்படும். மனத்தில் தெளிவு பிறக்கும். தந்தையாலும் அரசாங்கத்தாராலும் அனுகூலம் உண்டாகும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு அதிகரிக்கும். 26-ம் தேதி முதல் புதன் 12-ம் இடம் மாறுவதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும், கூரிய ஆயுதங்களை உபயோகிக்கும்போதும் பாதுகாப்பு தேவை. எதிலும் அவசரம் கூடாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: வடமேற்கு, வடக்கு, கிழக்கு
நிறங்கள்: மெரூன், பச்சை, வெண்மை, ஆரஞ்சு
எண்கள்: 1, 2, 5, 7
பரிகாரம்: துர்கை அம்மனையும் முருகனையும் வழிபடவும்.
விருச்சிக ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும் சுக்கிரனும் 10-ல் சூரியனும் புதனும் 11-ல் ராகுவும் சஞ்சரிப்பது விசேஷமாகும். வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். மனத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படும். வார நடுப்பகுதியிலிருந்து நல்ல திருப்பம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். பொருளாதார நிலை உயரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். அரசியல்வாதிகள், அரசுப்பணியாளர்கள், நிர்வாகத்துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கெல்லாம் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும்.
வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். வியாபாரம் பெருகும். மாணவர்களது நிலை உயரும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வாரப் பின்பகுதியில் நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். 26-ம் தேதி முதல் புதன் 11-ம் இடம் மாறுவதால் பல வழிகளில் ஆதாயம் வந்து சேரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22 (இரவு), 23, 27
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு
எண்கள்: 1, 3, 4, 5, 6
பரிகாரம்: சுப்பிரமணிய புஜங்கம், ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் நல்லது. ஏழை, எளியவர்களுக்கு உதவவும்.
தனுசு ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 8-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் 11-ல் செவ்வாயும் சனியும் சஞ்சரிப்பது சிறப்பு. கலைத்துறையினருக்கும் பெண்களுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் தொழில் புரிபவர்களுக்கு வருமானம் அதிகமாகும். பயணத்தின் மூலம் நலம் உண்டாகும். மக்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
பொருள் கொடுக்கல்-வாங்கலில் விழிப்புத் தேவை. வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிறருக்கு உதவி செய்வீர்கள். தந்தையால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். 26-ம்ம் தேதி முதல் புதன் 10-ம் இடம் மாறுவதால் செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22 (பகல்), 27
திசைகள்: தெற்கு, தென்மேற்கு, மேற்கு, தென்கிழக்கு
நிறங்கள்: நீலம், சிவப்பு, புகை நிறம், பச்சை, இளநீலம், வெண்மை
எண்கள்: 1, 4, 6, 8, 9
பரிகாரம்: விநாயகரையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கும் படித்தவர்களுக்கும் உதவவும்.
மகர ராசி நேயர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 8-ல் புதனும் 10-ல் செவ்வாயும் சனியும் உலவுவதால் எதிர்ப்புக்களைக் கடந்து வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். இயந்திரப் பணியாளர்கள் வளர்ச்சி காண்பார்கள். நிலபுலங்கள் சேரும். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும்.
7-ல் சுக்கிரன் உலவுவதால் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். 8-ல் சூரியன் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. 26-ம் தேதி முதல் புதன் 9-ம் இடம் மாறினாலும்கூட அவர் தன் ஆட்சி, உச்ச வீட்டில் சஞ்சரிக்கத் தொடங்குவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தர்மக் குணம் மேலோங்கும். அறிவாற்றல் பிரகாசிக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 23
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன், பச்சை
எண்கள்: 3, 5, 7, 8, 9
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும். ஆதித்தனை வழிபடவும்.
கும்ப ராசி நேயர்களே
கோசாரப்படி கிரகநிலை சிறப்பாக இல்லாததால் எக்காரியத்திலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். அலட்சியப்போக்கு கூடாது. பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. எதிரிகள் அருகில் இருப்பார்கள் என்பதால் யாரிடமும் வெளிப்படையாகப் பேச வேண்டாம். வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்ப்பது நல்லது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பொருளாதார நிலையில் வளர்ச்சி காண அரும்பாடுபட வேண்டிவரும். தேவைகளைச் சமாளிக்கக் கடன்படவும் நேரலாம்.
உடல்நலனை கவனிக்க வேண்டிவரும். மருத்துவச் செலவுகள் கூடும். பெண்களுக்குச் சோதனைகள் சூழும். கலைஞர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பயணத்தால் சங்கடம் ஏற்படும். எச்சரிக்கை தேவை. 26-ம் தேதி முதல் புதன் 8-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றம் காண்பார்கள். ஜனன கால ஜாதகம் வலுத்து, தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்பட தேவையில்லை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசை: மேற்கு
நிறம்: கருநீலம்
எண்கள்: 8, 9
பரிகாரம்: வேதம் படித்தவர்களைக் கொண்டு நவக்கிரக ஜப, ஹோமம் செய்யவும். கோளறு திருப்பதிகம் வாசிக்கவும். தினமும் காலை வேளையில் சிறிதுநேரம் தியானம் செய்வதன் மூலம் மன அமைதி காணலாம்.
மீன ராசி நேயர்களே
உங்கள் ராசிநாதன் குரு சுக்கிரனுடன் கூடி 5-ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும், சூரியனும் புதனும் 6-ல் இருப்பதாலும் செல்வாக்கும் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். தெய்வ தரிசனம் கிட்டும். சுப காரியங்கள் நிகழச் சந்தர்ப்பம் கூடிவரும். பணப் புழக்கம் அதிகமாகும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும்.
மாதர்களுக்கும் கலைஞர்களுக்கும் சுபிட்சம் கூடும். மக்களால் மன உற்சாகம் பெருகும். மகப்பேறு பாக்கியம் பெறச் சந்தர்ப்பம் உருவாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியமான காரியங்கள் இப்போது நிறைவேறும். எதிரிகள் அடங்கியே இருப்பார்கள். தொழில் நுட்பத்திறமை வெளிப்படும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம், ஆன்மிகம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். 26-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 22, 27
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு, வடக்கு
நிறங்கள்: இளநீலம், ஆரஞ்சு, பச்சை, வெண்மை, பொன் நிறம்
எண்கள்: 1, 3, 5, 6
பரிகாரம்: செவ்வாய், ராகு, சனி, கேது ஆகியோருக்கு அர்ச்சனை செய்வது நல்லது.