Published : 11 Oct 2018 10:32 AM
Last Updated : 11 Oct 2018 10:32 AM

வார ராசி பலன் - 11-10-2018 முதல் 17-10-2018 வரை (துலாம் முதல் மீனம் வரை )

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் திறன் அதிகரிக்கும். தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். ராசிநாதன் சுக்கிரனால் நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். நண்பர்களால் மனக்கிலேசங்கள் அகலும். பெண்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் சிக்கல்கள் தீரும். அரசியல்வாதிகளுக்கு, நெருங்கிய நண்பர்கள் மூலமாகவே சில இடையூறுகள் ஏற்படலாம். கலைத் துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு l நிறங்கள்: வெள்ளை l எண்கள்: 2, 5, 6 l பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லி மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும்.

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் சுபநிகழ்ச்சிகளுக்கிருந்த தடைகள் அகலும். பேச்சுத் திறமையால் காரிய வெற்றி உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு கிடைக்கும். வெளிநபர்களின் தலையீட்டால் காரியங்கள் சுபமாகும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில், கவனமாக இருக்க வேண்டும். கொடுக்கல் வாங்கல் வேண்டாம். பெண்களுக்கு, பேச்சுத் திறமையால் காரியங்களை எளிதாகச் செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதையும் தீர ஆலோசித்துச் செய்வது நன்மை தரும். கலைத் துறையினருக்கு எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன் l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் l எண்கள்: 3, 9 l பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் எதையும் யோசித்துச் செய்வது நன்மை தரும். கோபமாகப் பேசுவதைத் தவிர்த்து நிதானமாகப் பேசிச் செயல்பட வேண்டும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம். குடும்பத்தில் திடீர் சச்சரவுகள் தோன்றலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பொருட்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசி அனுசரித்துச் செல்ல வேண்டும். பெண்களுக்கு, கோபத்தைத் தவிர்த்து நிதானமாகப் பேசுவதால் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினருக்கு லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, திட்டமிட்டுப் பாடங்களைப் படிப்பது வெற்றிக்கு உதவும். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி l திசைகள்: தெற்கு, தென்கிழக்கு l நிறங்கள்: நீலம், பச்சை l எண்கள்: 5, 6 l பரிகாரம்: விநாயகப் பெருமானைத் தீபம் ஏற்றி அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வணங்க வேண்டும்.

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் முக்கியமான திருப்பம் ஒன்று நிகழும். அறிவுத் திறன் கூடும். சில முக்கிய முடிவுகளை எடுப்பதால் நீண்டநாள் பிரச்சினைகள் தீரும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். உங்களால் பிறருக்கு நன்மைகள் நடக்கும். வெளியூர்த் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு லாபம் இல்லாவிட்டாலும் வருமானத்துக்குக் குறைவு இருக்காது. உத்தியோகத்தில் மற்றவர் பணியில் தலையிட வேண்டாம். வீண் பிரச்சினை தடுக்கப்படும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு, நண்பர்களால் உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு, எதிர்காலத்தைப் பற்றிய எண்ணம் உண்டாகும். மேல் படிப்பு குறித்த சிந்தனையில் ஈடுபடுவீர்கள்.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி l திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு l நிறங்கள்: நீலம், பச்சை l எண்கள்: 2, 6 l பரிகாரம்: முருகனை வணங்கினால் எதிர்பார்த்த வெற்றி உண்டாகும்.

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். விருந்துகளில் கலந்துகொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் மனவருத்தம் நீங்கும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். செலவுகள் கூடும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொறுப்புகள் கூடும். பெண்களுக்கு, பயணங்கள் செல்ல நேரிடலாம். எடுத்த வேலையைச் செய்து முடிக்க காலதாமதமாகலாம். கலைத் துறையினருக்கு, உகந்த காலகட்டமிது. அரசியல்வாதிகள் எந்த ஒரு வேலையைச் செய்யும்போதும் கூடுதல் கவனத்துடன் செய்ய வேண்டும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற கூடுதல் நேரம் பாடங்களைப் படிப்பது நல்லது.

l அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி l திசைகள்: வடக்கு, வடகிழக்கு l நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் l எண்கள்: 1, 3, 6 l பரிகாரம்: தினம்தோறும் முருகன் கோயிலுக்குச் சென்றுவரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x