

ஜென் குரு இக்கியு, சிறுவனாக இருக்கும் போதே ஞானவானாக இருந்தார். அவரது குருவிடம் புராதனமான அழகிய தேனீர் கோப்பை ஒன்று இருந்தது. ஒரு நாள் அவர் அறையைச் சுத்தம் செய்த இக்கியு, கைதவறி அந்தக் கோப்பையை உடைத்து விட்டான். அப்போது குருவின் காலடிச் சத்தம் கேட்டது. சிறுவன் இக்கியு, உடைந்த துண்டுகளை அவசர அவசரமாகப் பொறுக்கி மறைத்துக் கொண்டான்.
குரு வந்தார். சிறுவன் இக்கியு அவனிடம், “ஏன் மனிதர்கள் இறக்க வேண்டும்?” என்று கேட்டார்.
“அது இயற்கையானது தான். ஒவ்வொன்றும் மடிய வேண்டியிருக்கிறது. அதற்கு முன் நீண்டகாலம் வாழ வேண்டியிருக்கிறது.”
இக்கியு கைகளில் மறைத்திருந்த உடைந்த கோப்பையின் துண்டுகளைக் காண்பித்து, “உங்கள் தேநீர் கோப்பைக்கு சாக வேண்டிய தருணம் இது.” என்றான்.