Published : 01 Aug 2018 03:39 PM
Last Updated : 01 Aug 2018 03:39 PM

வார ராசிபலன் ஆகஸ்டு 02 முதல் ஆகஸ்டு 08 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் முன்கோபத்தைத் தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் இருந்த சிரமம் நீங்கும். பணவரத்து இருக்கும். எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாது. உத்தியோகத்தில் வெளியூருக்கு மாற்றம் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும்.

பெண்களுக்கு, மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சில நற்பலன்கள் வந்தாலும் மனக்கஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினருக்கு, கடனுதவி செய்வதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு, சக மாணவர்களிடம் சகஜமாகப் பேசி பழகுவது நல்லது. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, வெண் நீலம் | எண்கள்: 1, 6

பரிகாரம்: வெள்ளிக்கிழமையன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்ற வேண்டும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் நீங்கி உற்சாகம் உண்டாகும். மனமகிழ்ச்சிக்கு பணம் செலவு செய்யத் தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும்  அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரப் பயணங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் வேண்டிய உதவிகள் மேலதிகாரிகளால் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

உஷ்ண சம்பந்தமான நோய்வரக்கூடும். வீண் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு, தாராளமாகப் பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். கலைத் துறையினருக்கு, கவுரவம் உயரும். அரசியல்வாதிகளுக்கு, தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். மாணவர்களுக்குப் பொறுப்புகள் அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடையத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 9

பரிகாரம்:  செவ்வாய்கிழமை முருகனுக்கு அரளிப்பூ சாற்றி வணங்க வேண்டும். 

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் சனி இருந்தாலும் வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் செலவுகள் கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சிகள் வீண் முயற்சியாகத் தெரிந்தாலும் அதற்கான பலன் பின்னர் கிடைக்கும்.

உத்தியோகத்தில் கூடுதல் வேலைச் சுமை இருக்கும். நல்ல பெயரும் கிடைக்கும். குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்களுக்கு, வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கலைத் துறையினருக்கு, நல்ல லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகள் நற்பெயர் எடுப்பதற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். மாணவர்களுக்கு, வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்: நாகதேவதையை வணங்க எல்லா பிரச்சினைகளும் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தைச் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரம் எதிர்பாராத சுபச்செலவும் ஏற்படும். நகைகளைக் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தொழில், வியாபாரத்தில் பணத்தேவையைச் சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில், அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு, பணவரத்து திருப்திகரமாக இருக்கும். கலைத் துறையினருக்கு, முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகள் வாகனங்களைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு, தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: நீலம், அடர்பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: சனிக்கிழமையன்று ஆஞ்சநேயரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவீர்கள். அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். படபடப்பு, பதற்றம் நீங்கும். மனத்திலிருக்கும் திட்டங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது.

பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு, கோபத்தைக் குறைத்து நிதானமாகப் பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கலைத் துறையினருக்கு, அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, பலன்கள் கிடைக்கும். செலவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காணக் கூடுதல் கவனத்துடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களைப் படிப்பது நல்லது.  

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், சனி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மஞ்சள், நீலம் | எண்கள்: 3, 8

பரிகாரம்: சனிக்கிழமை அன்று பெருமாளை வழிபடுவது மனோபலத்தை அதிகரிக்கச் செய்யும். எதிர்ப்புகள் அகலும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் நன்மையே நடக்கும். எந்தவொன்றிலும் அதிகம் யோசிப்பதைத் தவிர்ப்பது நல்லது. திடீர் பணத்தேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் தகவல்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில், மேலதிகாரிகளால் அனுகூலம் ஏற்பட்டாலும், சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுவது நல்லது.

குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை. கடன் விவகாரங்களில் யோசித்துச் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு, வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். கலைத் துறையினருக்கு, வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகள் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு, கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: மஞ்சள், சிவப்பு | எண்கள்: 2, 3

பரிகாரம்: வியாழக்கிழமை அன்று நவக்கிரகங்களை வணங்கி வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். பணவரத்து கூடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x