

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு கிருத்திகைதோறும் சிறப்பு வழிபாடு நடக்கும். ஆடிக் கிருத்திகை வந்துவிட்டாலோ காவடி தூக்குதல், அலகு குத்துதல் எனப் பல வகையிலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். வேலூரை அடுத்த தீர்த்தகிரியில் கோயில்கொண்டிருக்கும் முருகனுக்கு ஆடிக் கிருத்திகையையொட்டி வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது.
படம்: வி.எம்.மணிநாதன்