டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்

டிச.30-ம் தேதி முதல் ஜன. 8 வரை: சொர்க்கவாசல் தரிசனம்
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பக்தர்களுக்கு சொர்க்க வாசல் தரிசன ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கு ஆன்லைன் மற்றும் நேரடி டிக்கெட் விநியோகம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் முதல் ஆன்லைன் மூலமாகவே அங்கப்பிரதட்சண டோக்கன் தொடர்ந்து 3 மாதங்களுக்கு வழங்கப்படும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரும் நவம்பர் 17 முதல் 25-ம் தேதி வரை கார்த்திகை மாத பிரம்மோற்சவம் நடைபெறும். அதற்கான பணிகள் சிறப்பாக நடந்து வருகின்றன.

ரூ.750 கோடி செலவில் மீனவர்கள், எஸ்.சி., எஸ்.டி. சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் 5,000 பஜனை கோயில்கள் கட்டப்படும். திருமலையில் பசுமை இன்னும் பலப்படுத்தப்படும். பக்தர்கள் இடைத்தரகர்களை நம்பி ஏமாறவேண்டாம் என மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in