

குமுளி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை திருவிழா வரும் 17-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக வரும் 16-ம் தேதி மாலையில் கோயில் நடை திறக்கப்பட உள்ளது.
பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமே சுவாமி தரிசனம் செய்ய முடியும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்க உள்ளது. தற்போது ஆன்லைன் முன்பதிவுக்கான செயலியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
தரிசனத்துக்கு வரும் தேதி, நேரம், காலநிலை, அவசரகால அழைப்பு, மருத்துவ வசதி உள்ளிட்ட வசதிகளுடன் இந்த செயலி செயல்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.