மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்

மருதமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை தொடக்கம்
Updated on
1 min read

கோவை: கோவை மாவட்டம் மருதமலை முருகன் கோயிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண உற்சவங்கள் நாளை (அக்.22) தொடங்குகின்றன.

நாளை (22ம் தேதி) காலை 7 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா தொடங்குகிறது. காலை 9.15 மணிக்கு கங்கனம் கட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து நாளை முதல் வரும் அக்.28-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையும் யாக சாலை பூஜை, அபிஷேக பூஜை, சுவாமி திருவீதி உலா ஆகியவை நடக்கிறது.

தொடர்ந்து வரும் அக்.27-ம் தேதி காலை 6.30 மணி முதல் 7.30 மணிக்குள் மூலவரிடம் சண்முகார்ச்சனை, காலை 11 மணி முதல் மதியம் 12 மணிக்குள் உற்சவரிடம் சண்முகார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து மதியம் 3 மணிக்கு அன்னையிடம் வேல் வாங்குதலும், சுவாமி சம்ஹாரத்துக்கு எழுந்தருளுதலும், மாலை 4 மணிக்கு அபிஷேகம் மற்றும் சண்முகார்ச்சனை ஆகியவையும், அக்.28ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் திருக்கல்யாணம், புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா ஆகியவையும் நடக்கிறது.

விழாவையொட்டி வரும் அக்.27-ம் தேதி மற்றும் 28-ம் தேதி ஆகிய நாட்களில் மலைக்கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை. பக்தர்கள் மலைப்படிகள் வழியாகவும், திருக்கோயிலின் பேருந்து மூலமாகவும் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என்று கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in