கோவிந்தா... கோவிந்தா கோஷத்தில் அதிர்ந்த திருமலை: கருட சேவையை காண குவிந்த திரளான பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்றிரவு பிரசித்தி பெற்ற கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவில் நேற்றிரவு பிரசித்தி பெற்ற கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள் என்றாலே கருட சேவைதான் நினைவுக்கு வரும். நாடு முழுவதிலும் இருந்து கருட சேவையை காண பக்தர்கள் நேற்று திருமலைக்கு படை எடுத்து வந்தனர்.

புரட்டாசி மாதம் என்பதால் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். நேற்று காலை நடந்த மோகினி அலங்கார வாகன சேவையிலேயே பக்தர்கள் மாட வீதிகளில் குவிய தொடங்கி விட்டனர்.

எப்​போதும் இல்​லாத வகை​யில் அரை மணி நேரம் முன்​ன​தாக நேற்று மாலை 6.15 மணிக்கு வாகன மண்​டபத்​தில் கருட வாக​னத்​தில் உற்​சவ​ரான மலை​யப்​பர் எழுந்​தருளி​னார். மூல​வர் அணி​யும் 5 பேட்டை தங்க காசு மாலை, ஆண்​டாள் அருளிய சிகாமணி மலர் மாலை, கிளி​கள் அணிந்து கம்​பீர​மாக எழுந்​தருளிய மலை​யப்​பரை கண்​டு, அங்கு கூடி​யிருந்த கூட்​டம் கோவிந்​தா..கோ​விந்தா பக்தி பரவசத்​தில் கோஷங்​கள் எழுப்​பியது.

கருட வாக​னத்​தின் முன் காளை, குதிரை, யானை போன்ற பரிவட்​டங்​கள் செல்ல, ஜீயர் குழு​வினர் நாலா​யிரம் திவ்ய பிரபந்​தத்தை பாடிய படி செல்ல, தமிழகம் உட்பட சுமார் 10-க்​கும் மேற்​பட்ட மாநிலங்​களை சேர்ந்த நடன கலைஞர்​கள் மாட வீதி​களில் நடன​மாடியபடி சென்று கருட சேவையை மேலும் சிறப்​பித்​தனர்.

நேற்று மாட வீதி​களில் மட்​டும் சுமார் 2 லட்​சம் பக்​தர்​கள் கூடி​யிருந்​தனர். மாட வீதி​களுக்கு வெளியே மேலும் 2 லட்​சம் பக்​தர்​கள் காத்​திருந்​தனர். இவர்​களும் படிப்​படி​யாக மாட வீதி​களுக்​குள் அனு​ம​திக்​கப்​பட்டு கருட வாகன சேவையை கண்டு களித்​தனர். மாலை 6.15 மணி முதல் இரவு 11.30 மணி வரை கருட வாகன சேவை நடந்​தது. இதில் சுமார் 4 லட்​சம் பக்​தர்​கள் கலந்து கொண்​டு சுவாமி தரிசனம்​ செய்​தனர்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in