ஹிந்து தர்மார்த்த சமிதி சார்பில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: பக்தர்கள் தரிசனம் 

ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருப்பதி திருக்குடை உபய உற்சவம் ஊர்வலம் பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயில் அருகே நேற்று தொடங்கியது. உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீவித்யாதீஷ தீர்த்தரு சுவாமிஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்,  | படங்கள்: எல்.சீனிவாசன் |
ஹிந்து தர்மார்த்த சமிதி அறக்கட்டளை சார்பில், திருப்பதி திருக்குடை உபய உற்சவம் ஊர்வலம் பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயில் அருகே நேற்று தொடங்கியது. உடுப்பி ஸ்ரீ பலிமார் மடம் பீடாதிபதி ஸ்ரீவித்யாதீஷ தீர்த்தரு சுவாமிஜி, அறங்காவலர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர், | படங்கள்: எல்.சீனிவாசன் |
Updated on
1 min read

சென்னை: ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் திருப்​பதி திருக்​குடை ஊர்​வலம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. ஏராள​மான பக்​தர்​கள் தரிசனம் செய்​தனர். திரு​மலை திருப்​பதி பிரம்​மோற்​சவத்தை முன்​னிட்​டு, ஹிந்து தர்​மார்த்த சமிதி சார்​பில் கடந்த 2005-ம் ஆண்டு முதல் திருக்​குடைகள் உபய​மாக வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில், சென்னை பூக்​கடை சென்​ன கேசவப் பெரு​மாள் கோயி​லில் 21-ம் ஆண்டு திருக்​குடை ஊர்வல தொடக்க விழா நேற்று காலை நடை​பெற்​றது. 11 வெண்​பட்​டுக் குடைகளுக்​கும் சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்​டன.

20 லட்சம் பேர் தரிசனம்: ஹிந்து தர்​மார்த்த சமி​தி​யின் நிர்​வாக அறங்​காவலர் எஸ்​.வே​தாந்​தம்ஜி தலைமை வகித்​தார். அறங்​காவலர் ஆர்​.ஆர்​. கோ​பால்ஜி வரவேற்​றார். அவர் பேசும்​போது, “இந்த பிரார்த்​தனை குடைகளை 5 நாள் யாத்​திரை​யில் 20 லட்​சம் பக்​தர்​கள் தரிசனம் செய்​கின்​றனர். பல்​வேறு அச்​சுறுத்​தல்​கள், இடைஞ்​சல்​களை கடந்து 21-வது ஆண்​டாக திருப்​பதி திருக்​குடை ஊர்​வலம் நிகழ்ச்சி வெற்​றிகர​மாக நடை​பெறுகிறது” என்​றார்.

அனைவரையும் ரட்சிக்கும்: கர்​நாடக மாநிலம் உடுப்பி பலி​மார் மடத்​தின் பீடா​திபதி ஸ்ரீ வித்​யாதீஷ தீர்த்​தரு சுவாமி ஆசி வழங்​கிப் பேசும்​போது, “கட​வுளுக்கு குடை அவசி​யம் இல்​லை. மழை, வெயில் மற்​றும் பிற இடையூறுகளில் இருந்து நம்மை அவர் காப்​பாற்ற வேண்​டும் என்று பிரார்த்​தித்து இதை அவருக்கு சமர்ப்​பிக்​கிறோம். தமிழக மக்​கள் அனை​வரை​யும் இந்த குடை ரட்​சிக்​கும்” என்​றார். பின்​னர், அனை​வரும் கொடியசைத்து திருக்​குடை ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தனர்.

என்​எஸ்சி போஸ் சாலை, கோவிந்​தப்ப நாயக்​கன் தெரு சந்​திப்​பு, பைராகி மடம், வால்​டாக்ஸ் சாலை வழி​யாக மாலை 5 மணி அளவில் குடைகள் கவுனி தாண்​டின. வழி நெடு​கிலும் ஏராள​மான பக்​தர்​கள் தரிசித்​தனர். பின்​னர், ஓட்​டேரி, அயனாவரம், கொன்​னூர் நெடுஞ்​சாலை வழி​யாக சென்று காசி விஸ்​வ​நாதர் கோயி​லில் குடைகள் நேற்று இரவு வைக்​கப்​பட்​டன.

பல்​வேறு பகு​தி​களை கடந்து செல்​லும் குடைகள் இன்று இரவு வில்​லி​வாக்​கம் சவுமிய தாமோதரப் பெரு​மாள் கோயி​லிலும், நாளை இரவு திரு​முல்​லை​வா​யில் வெங்​கடேஸ்​வரா பள்​ளி​யிலும் தங்​கு​கின்​றன. 26-ம் தேதி இரவு கீழ்​திருப்​ப​தி​யில் பத்​மாவதி தா​யாருக்கு 2 குடைகளும், 27-ம் தேதி காலை திரு​மலை திருப்​ப​தி​யில்​ சுவாமிக்​கு 9 குடைகளும்​ சமர்ப்​பிக்​கப்​பட உள்​ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in