சென்னையில் திருப்பதி திருக்குடை ஊர்வலம்: ஆளுநர் ஆர்​.என்​.ரவி தொடங்கி வைத்தார்

விசுவ ஹிந்து பரிஷத்தின் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கி வைத்தார். விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், மாநில செயலாளர் பாலமணிமாறன், அகில இந்திய டிரஸ்டி மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படங்கள்: ம.பிரபு |
விசுவ ஹிந்து பரிஷத்தின் திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் நேற்று தொடங்கி வைத்தார். விசுவ இந்து பரிஷத்தின் தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், மாநில செயலாளர் பாலமணிமாறன், அகில இந்திய டிரஸ்டி மணிகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். | படங்கள்: ம.பிரபு |
Updated on
1 min read

சென்னை: திருக்​குடை சேவா சமிதி டிரஸ்ட் சார்​பாக ஏற்​பாடு செய்​யப்​பட்​டிருந்த திருக்​குடை உபய உற்சவ ஊர்​வலத்தை ஆளுநர் ஆர்​.என்​.ரவி சென்​னை​யில் கொடியசைத்து தொடங்கி வைத்​தார். திரு​மலை திருப்​பதி ஏழு​மல​யான் கோயில் பிரம்​மோற்சவ காலத்​தில் தமிழகத்​திலிருந்து ஸ்ரீவில்​லிபுத்​தூர் ஆண்​டாள் மலர்மாலை, வெண்​பட்டு திருக்​குடைகள் கருடச் சேவைக்​காக சமர்ப்​பிக்​கப்​படும்.

அதன்​படி திருக்​குடை சேவா சமிதி டிரஸ்ட் - விசுவ இந்து பரிஷத் தமிழ்​நாடு சார்​பாக, ஒவ்​வோர் ஆண்​டும் திரு​மலை ஸ்ரீவெங்​கடேசப் பெரு​மாளுக்கு அழகிய வெண்​பட்டு திருக்​குடைகள் ஊர்​வல​க​மாக எடுத்​துச் செல்​லப்​பட்டு சமர்ப்​பணம் செய்​யப்​பட்டு வரு​கிறது. அந்த வகை​யில் நடப்​பாண்​டுக்​கான திருக்​குடை ஊர்​வலத்​தின் தொடக்க விழா பூக்​கடை சென்னகேசவ பெரு​மாள் கோயி​லில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற ஆளுநர் ஆர்​.என்​.ரவி கொடியசைத்து ஊர்​வலத்தை தொடங்கி வைத்​தார். இதற்கு விசுவ இந்து பரிஷத் வட தமிழ்​நாடு மாநிலத் தலை​வர் ஆண்​டாள் சொக்​கலிங்​கம் தலைமை வகித்​தார். மேலும் இந்​நிகழ்​வில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், நடிகர் ரஞ்​சித் மற்​றும் ஏராள​மான பக்​தர்​கள் கலந்​து​கொண்​டனர்.

அழகிய 21 திருக்​குடைகள் பொது​மக்​கள் பக்​தர்​கள் வழி​பாடு​களு​டன் ஊர்​வல​மாகச் சென்று செப்​டம்​பர் 21-ம் தேதி காலை 10 மணிக்கு திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானத்​துக்கு சொந்​த​மான ஸ்ரீ பத்​மாவதி தாயார் திருக்​கோயி​லிலும், மாலை 4 மணி​யள​வில் திருப்​பதி திரு​மலை​யில் தேவஸ்​தான அதி​காரி​களிட​மும் தமிழக மக்​கள் பிரார்த்​தனை​களு​டன் சமர்ப்​பிக்​கப்​படும் என்று திருக்​குடை சேவா சமிதி டிரஸ்ட் நிர்​வாக அறங்​காவலர்​ ஜி.​ராமலிங்கம் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in