Published : 04 Jul 2018 05:12 PM
Last Updated : 04 Jul 2018 05:12 PM

வார ராசிபலன் ஜூலை 05 முதல் ஜூலை 11 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்க, ராசியில் குரு பகவானின் இருப்பு அமைந்திருக்கிறது. வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். லாபஸ்தானத்தில் இருக்கும் ராசிநாதனால் லாபகரமான பயணங்கள் அமையும். மனமகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். புத்தித் தெளிவு உண்டாகும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். மனதைரியம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். உறவினர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விருப்பங்கள் கைகூடும். அக்கம்பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களுக்கு, மனம்மகிழும் காரியங்கள் நடக்கும். அரசியல்வாதிகளுக்கு, கட்சிப் பிரச்சினைகளில் நல்ல தீர்வு கிடைக்கும்.கலைத் துறையினர் புதிய வாய்ப்புகளால் வெற்றி அடைவார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் ஆராய்ந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நன்மை அளிக்கும். குருவின் விரய ஸ்தான சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் மனம் நோகும்படியிருந்த சூழ்நிலை மாறும். நிதானமாகச் செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு, கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத் துறையினர், புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு, கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 6, 9

பரிகாரம்: திருமுருகாற்றுபடையைப் பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்டபிணி நீங்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் குரு லாபஸ்தானத்தில் இருக்கிறார். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். செவ்வாயின் தனஸ்தான சஞ்சாரம் சுப பலன்களைத் தரும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். எதிலும் பொறுமை, நிதானம் அவசியம். தொழில், வியாபாரம் திருப்தியாக நடக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்குக் கிடைக்கலாம். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு உதவி கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

உறவினர்களிடமிருந்து நல்ல தகவல் வந்துசேரும். குடும்பத்தினருடன் ஆன்மிகப் பயணம் செல்லலாம். பெண்களுக்கு, எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், கட்சித் தலைமையின் ஆணையை மீறித் தனியாகச் செயல்பட வேண்டாம். கலைத் துறையினருக்கு, சர்வதேச நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். மாணவர்களுக்கு, மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 3, 6

பரிகாரம்: குருவுக்கு சாமந்தி மலரை சமர்ப்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியில் செவ்வாய், கேதுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். ராசியை சூரியன், புதன் பார்க்கிறார்கள். எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் ஆர்வம் காண்பீர்கள். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் விரிவாக்கத்துக்குத் தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப் பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில், சுபகாரியங்கள் நடக்கும். உறவினர்கள், நண்பர்களால் நன்மை நடக்கும். பெண்களுக்கு, பணவரத்து இருக்கும். அரசியல்வாதிகள், எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத் துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு, கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: வியாழன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெளிர் நீலம், மஞ்சள் | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் நீங்கும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த காரியத்தைச் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகும். குரு ராசியைப் பார்ப்பதனால் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். தொழில், வியாபார காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். உத்தியோகத்தில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடைமைகளை கவனமாகப் பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். புதிதாக வீடு, மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு, மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதைத் தவிர்க்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு,  தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத் துறையினருக்கு பணவரத்து இருக்கும். நிலுவைப்பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தென்மேற்கு

நிறங்கள்: நீலம், மஞ்சள் | எண்கள்: 2, 3, 6

பரிகாரம்: விநாயகப் பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த  உடல் உபாதை மறையும். மனக்கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம்.  திட்டமிட்டபடி காரியங்களைச் செய்வதில் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு, திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு, மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாகப் பாடங்களைப் படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x