ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தைக் காணத் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.
ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தைக் காணத் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

மேல்மலையனூர் கோயிலில் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Published on

விழுப்புரம்: மேல்​மலை​யனூர் அங்​காளம்​மன் கோயி​லில் நேற்று முன்​தினம் இரவு நடை​பெற்ற ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர்.

விழுப்​புரம் மாவட்​டம் மேல்​மலை​யனூர் கிராமத்​தில் பிரசித்தி பெற்ற அங்​காளம்​மன் கோயி​லில் ஆவணி மாத அமா​வாசை ஊஞ்​சல் உற்​சவம் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதையொட்​டி, அதி​காலை​யில் கோயில் நடை திறக்​கப்​பட்​டு, மூல​வ​ரான அங்​காளம்​மனுக்கு பால், தயிர், இளநீர், தேன் உள்​ளிட்ட பொருட்​களைக் கொண்டு அபிஷேகம் நடை​பெற்​றது. பின்​னர், அம்​மனுக்கு தங்​கக் கவசம் அணி​வித்து மகா தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, மங்கல இசை ஒலிக்க, வடக்கு வாசல் வழி​யாக வந்து ஊஞ்​சல் மண்​டபத்​தில் சிறப்பு அலங்​காரத்​தில் அங்​காளம்​மன் எழுந்​தருளி அருள்​பாலித்​தார். அப்​போது அங்​காளம்​மனை போற்றி கோயில் பூசா​ரி​கள் தாலாட்​டுப் பாடல்​களை பாடினர். அம்​மனுக்கு தீபா​ராதனை காண்​பிக்​கப்​பட்​டது. ஊஞ்​சல் மண்​டபத்​தில் பல்​லா​யிரக்​கணக்​கான பக்​தர்​கள் அம்​மனை தரிசனம் செய்​தனர். நள்​ளிரவு ஊஞ்​சல் உற்​சவம் நிறைவு பெற்​றதும், கோயிலுக்கு உற்​சவர் அங்​காளம்​மன் கொண்டு செல்​லப்​பட்​டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in