Published : 04 Jul 2018 05:12 PM
Last Updated : 04 Jul 2018 05:12 PM

வார ராசிபலன் ஜூலை 05 முதல் ஜூலை 11 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் உச்சமாக இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல பலன்களைப் பெறப் போகிறீர்கள். குருவின் பார்வை ராசி மீது விழுவதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். சுபச்செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி பயணங்கள் செல்வீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

நல்ல பெயர் கிடைக்கும். அந்தரங்க விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதைத் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு, எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள், தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு,  கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன்  படிப்பது அவசியம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: செவ்வாய்கிழமை நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்ற வேண்டும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன், சுகஸ்தானத்தில் இருக்கிறார். அஷ்டமத்துச் சனி நடந்தாலும் மற்ற கிரகங்கள் அனைத்தும் அனுகூலம் தரும் வகையில் சஞ்சரிக்கின்றனர். பணவரவு அதிகரிக்கும். மனக்கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபார விஷயங்கள் சாதகமாக  நடக்கும். நயமாகப் பேசுவதால் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் கவனமாகச் செயல்பட வேண்டும்.

வேலையிடத்தில் பொருள்களை கவனமாகப் பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். பணம் சார்ந்த பிரச்சினைகள் ஒரு முடிவுக்கு வரும். பெண்களுக்கு, காரிய அனுகூலம் உண்டாகும். கலைத் துறையினருக்கு, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள், தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு, பெற்றோரின் உதவி பெருகும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்:  வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் தனவாக்கு, குடும்ப ஸ்தானத்தில் ராகுவுடன் இணைந்து சஞ்சரிக்கிறார். திருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாலித்தனத்தால் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். பாராட்டு கிடைக்கும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப் புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கக் கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில், உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பெண்கள், திருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள், கட்சித் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவார்கள். கலைத்துறையினருக்கு, வருமானம் உயர வழி பிறக்கும். மாணவர்களுக்கு, பாடங்களைக் கவனமாகப் படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 2, 5, 6

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் உங்கள் உணர்வுக்கு மதிப்பளிக்கும் சம்பவங்கள் நடக்கும். ராசியில் இருக்கும் கிரகங்களின் கூட்டணியாலும் ராசியைச் செவ்வாய் பார்ப்பதாலும் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபச்செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்கள்  செல்ல நேரலாம்.

புத்திசாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பார்கள். கணவன் மனைவிக்கிடையே  மனவருத்தம்  நீங்கும். பெண்களுக்கு, காரியங்களில் முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகள், கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத் துறையினர், உங்கள் படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு, கல்வியில் இருந்த  தொய்வு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும்.எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உபதொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உருவாகும். உத்தியோகத்தில், புத்தி சாதுரியத்தால் வேலைகளைத் திறமையாகச் செய்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். மேலிடத்துடன் உரசல்கள் நீங்கும்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பெண்களுக்கு, உதவி கேட்டு வருபவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். அரசியல்வாதிகள், சகாக்களைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத் துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு, கல்வியில் அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: வெள்ளை, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்:  தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா வேலைகளையும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பீர்கள்.எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். எதிர்பார்த்த தகவல்கள் சாதகமாக இருக்கும். விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். பணவரத்து இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கக் காரியங்களில் சாதகமான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு, நிதானமாகப் பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள், கோஷ்டிச் சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத் துறையினர், மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்கள் எளிமையாக தோன்றும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  குலதெய்வத்தை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x