Published : 25 Jul 2018 05:42 PM
Last Updated : 25 Jul 2018 05:42 PM

வார ராசிபலன் ஜூலை 26 முதல் ஆகஸ்டு 01 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். வாகனங்களை  ஓட்டிச் செல்லும்போது கவனம் தேவை. தொழில், வியாபார நடைமுறைகளில் தாமதம் ஏற்படலாம். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டும். உத்தியோகத்தில் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றைச் சந்திக்கலாம். குடும்பத்தில் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள்  விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உங்கள் பொறுப்புணர்வுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு துணிச்சல் அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: மஞ்சள்,சிவப்பு | எண்கள்: 3, 9

பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர வேண்டும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்தக் காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளைச் சமாளிக்க வேண்டும். புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. தொழில், வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில், வீண் அலைச்சலைச்  சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலகப் பணிகளால் பதற்றம் உண்டாகும். அக்கம்பக்கத்தினருடன் சில்லறைச் சண்டைகளுக்கான சூழ்நிலை வரலாம்.

அரசியல்வாதிகளுக்கு அனுகூலமாக இருந்தாலும் பற்பல சோதனைகளை சந்திக்க வேண்டி வரும். கலைத் துறையினருக்கு பல்வேறு வகைகளில் அனுசரணையாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் வாய்க்கும்.. பெண்களுக்கு, அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். தெய்வ பக்தி அதிகரிக்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பாக பதற்றம்  ஏற்பட்டு நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6

பரிகாரம்:  அஷ்டலட்சுமிகளையும் வணங்கி வர மனோதைரியம் கூடும். பணகஷ்டம் குறையும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் எந்த இக்கட்டான சூழ்நிலையையும் சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதைச் செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். புதிய வர்த்தக ஆர்டர்களைப் பெறுவதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் வீண் அலைச்சல், வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.

கலைத் துறையினருக்கு, உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி, பொறுப்புகள்  கிடைக்கும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு, சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். பெண்களுக்கு, மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்க நேரிடலாம். பெரியவர்கள் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும். மாணவர்களுக்கு, பிறருக்கு உதவிகள் செய்வதில் கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: வடக்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 2, 5

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்கி வர முன்ஜென்மப் பாவம் நீங்கும். திருமணமாகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் பார்வையாலேயே மற்றவர்களைப் பணியவைக்கும் திறமை உண்டாகும். கிரகச் சேர்க்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களைக் கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம்.  குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். புத்திசாதுரியத்தால் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும். கலைத் துறையினருக்கு, ஒப்பந்தங்கள் எடுப்பதில் கவனம் தேவை.

கடின உழைப்பு வெற்றியைத் தேடித்தரும். சிறு சிக்கல்கள் ஏற்பட்டு மறையும். அரசியல்வாதிகளுக்கு,  பாராட்டு கிடைக்கும். பயணங்களின் போது உடமைகளைக் கவனமாகப்  பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கவனத்துடன் செயல்பட்டால் சிக்கல்களைத் தவரிக்கலாம். சிறிய செலவுகளைச் சந்திக்க நேரிடலாம். தைரியத்தால் வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு, சக மாணவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: மேற்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6

பரிகாரம்: பிரத்தியங்கரா தேவிக்கு அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். களைப்பு, பித்தநோய் உண்டாகலாம். வீண்கவலை இருக்கும். வெளி வட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை. லட்சியங்கள் கைகூடும். மனதுக்கு நெகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில், கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையைச் செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

பெண்களுக்கு, எடுத்த காரியத்தைச் செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, அதீத கவனத்துடன் செயல்படுவதால் பதவி உயர்வு மற்றும் வெற்றி கிடைக்கும். கலைத் துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு நெடுநாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்களுக்கு, கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில்  சரபேஸ்வரரை வணங்க காரியத் தடை நீங்கும். மன அமைதி கிடைக்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரத்தில்  சுமாரான லாபம் இருக்கும். புதிய வர்த்தக ஆர்டர்கள் வந்து சேரும். செலவு கூடும். உத்தியோகத்தில் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. அவர்கள் நலனுக்காகச்  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகளின் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள்.

விருந்து, கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சினை குறையும். அரசியல்வாதிகளுக்கு, பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். கலைத் துறையினருக்கு, வீண் அலைச்சல், பயம் குறையும். பெண்களுக்கு, எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாகப் படிக்க வேண்டும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம் | எண்கள்: 2, 5

பரிகாரம்: அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்தில் பெருமாளைத் தரிசித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x