டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

டெல்லியில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தமிழ் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லிக்கு வந்த வாழும் கலை அமைப்பின் குருதேப் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் தில்லி தமிழ் சங்கத்தின் நிர்வாகிகள் இன்று (மார்ச் 5) நேரில் சந்தித்தனர். அப்போது, தில்லி தமிழ் சங்கத்தின் நடவடிக்கைகளை ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் பாராட்டினார்.

இன்று மார்ச் 5, புதன்கிழமை வாழும் கலை அமைப்பின் நிறுவனர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் டெல்லிக்கு வந்தார். அப்போது அவரை தில்லி தமிழ் சங்க நிர்வாகிகள், அதன் பொதுச்செயலாளரான இரா.முகுந்தன் தலைமையில் சந்தித்து ஆசி பெற்றனர். இந்த சந்திப்பின் போது தில்லி சங்கத்தின் நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிந்ததாகக் கூறி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பாராட்டினார். மேலும் அவர், இந்திய கலாச்சாரத்தின் வளர்ச்சிக்கான தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பங்களிப்பை தான் அறிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தில்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வாழும் தமிழர்கள் இடையே, தில்லி தமிழ் சங்கத்தின் செயல்பாடுகள் தமக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் குருதேவ் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறிப் பெருமிதம் கொண்டார். புது டெல்லியில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையையும் அவர் கேட்டறிந்தார். தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, வாழும் கலை அமைப்பின் மூலமாக டெல்லிவாழ் தமிழர்களை விரைவில் சந்திக்கவும் ஆவலாக இருப்பதாகத் அவர் தெரிவித்தார்.

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் நிர்வாகிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும் அவரின் ஆசியுடன் நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, தில்லி தமிழ் சங்கத்தின் தலைவர் சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் இரா. முகுந்தன், இணைச் செயலாளர் டாக்டர்.சுந்தர்ராஜன், மற்றும் பொருளாளர் எஸ்.அருணாசலம் ஆகியோர் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in