திருச்சானூரில் 6-ம் நாள் பிரம்மோற்சவம்: தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

திருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்தின் 6-ம் நாளான நேற்று தங்கத் தேரில் பத்மாவதி தாயார் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 9 நாட்கள் வரை நடைபெறும் இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வாகன சேவைகளை கண்டு களித்து, தாயாரை வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 6-ம் நாளான நேற்று காலை காளிங்க நர்தனமாடிய ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். வாகன சேவையில் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பல்வேறு மாநில நடன குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று மாலை தங்க தேரோட்டத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளினார். அந்த தேரை ஏராளமான பெண்கள் வடம் பிடித்து இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதனை தொடர்ந்து, இரவு கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in