சபரிமலை துணை கோயில்களிலும் மண்டல கால வழிபாடுகள் மும்முரம்: களைகட்டும் மஞ்சள்மாதா ஆலயம்

சபரிமலை துணை கோயில்களிலும் மண்டல கால வழிபாடுகள் மும்முரம்: களைகட்டும் மஞ்சள்மாதா ஆலயம்
Updated on
1 min read

தேனி: ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜையைத் தொடர்ந்து மஞ்சள்மாதா உள்ளிட்ட சபரிமலையின் பல்வேறு துணை கோயில்களிலும் வழிபாடுகள் களைகட்டியுள்ளன.

சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புரத்தம்மன் எனும் துணை ஆலயம் அமைந்துள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்த பின்னர் இந்த ஆலயத்தில் உள்ள மஞ்சள்மாதாவை பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த அம்மன் பந்தளம் அரசு குடும்பத்தின் குல தெய்வம் ஆகும். ஐயப்பனுக்கு அளிக்கப்படும் அதே முக்கியத்துவம் இந்த அம்மனுக்கும் அளிக்கப்படுகிறது. தனி மேல்சாந்தி மூலம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைக்கு நடை திறக்கப்பட்டதில் இருந்தும் இந்த ஆலயத்திலும் வழிபாடுகள் களைகட்டி வருகின்றன. இதற்காக கோயில் வளாகத்தில் பக்தர்கள் தேங்காய்களை உருட்டி வழிபாடு செய்து வருகின்றனர். மேலும் அம்மனுக்கு உகந்த மஞ்சள் பொடி, ஜாக்கெட் புதுத்துணி போன்றவற்றையும் வழங்கி வருகின்றனர்.

திருமண பாக்கியம் தரும் என்ற ஐதீகம் உள்ளதால் இங்கு வரும் ஐயப்ப பக்தர்கள் இந்த வழிபாடுகளை அதிகளவில் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உறவினர்கள், நண்பர்கள் கொடுத்து அனுப்பிய மஞ்சள்பொடி, புதுத்துணி போன்றவற்றை காணிக்கையாக அளித்து வருகின்றனர். இதே போல் இங்குள்ள அய்யப்பன் மணிமண்டபம், நாகராஜா சந்நிதி மற்றும் உபகோயில்களான பம்பா கணபதி, நிலக்கல் மகாதேவர் கோயில், பள்ளியரக்காவு தேவி உள்ளிட்ட பல கோயில்களில் வழிபாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in