

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜைகள் இன்று முதல் தொடங்குகின்றன. இதையொட்டி பக்தர்கள் இன்று முதல் மாலை அணிந்து விரத்தை தொடங்குகின்றனர். இதற்காக சென்னையில் உள்ள ஐயப்பன் கோயில்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாநகர் ஐயப்பன் கோயிலில் காலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை அணிய கட்டணமாக ரூ.10 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், பின்னர் ஆயுஷ் ஹோமம், நவக்கிரக ஹோமங்கள் நடைபெறுகின்றன. அதன்பின், பக்தர்கள் மாலை அணியவுள்ளனர். ராஜா அண்ணாமலைபுரம் கோயிலிலும் மண்டல பூஜை தொடங்குகிறது. மேலும், பக்தர்கள் மாலை அணியவும், இருமுடியுடன் 18 படிகள் ஏறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.