திருப்பதி ஏழுமலையானை 2 நாளில் தரிசனம் செய்த 1.72 லட்சம் பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையானை 2 நாளில் தரிசனம் செய்த 1.72 லட்சம் பக்தர்கள்
Updated on
1 min read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும், அரசு விடுமுறை நாட்களிலும், பண்டிகை காலங்களிலும், பிரம்மோற்சவம், ரதசப்தமி மற்றும் புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

இந்த சூழலில் வார இறுதி நாட்களில் பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் சுவாமியை முன்பைவிட சற்று விரைவாக தரிசிக்க முடிகிறது. வார இறுதி நாளான கடந்த சனிக்கிழமை மட்டும் சுவாமியை 88,076 பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமை 84,489 பக்தர்களும் தரிசித்துள் ளனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 1,72,565 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in