Published : 09 Jun 2018 11:11 AM
Last Updated : 09 Jun 2018 11:11 AM

திருச்செந்தூர் அருகே நரசன்விளையில் சந்தனமாரியம்மன், உச்சினிமாகாளி, முத்தாரம்மன்! - 10ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ளது ஆத்தூர். இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது நரசன்விளை எனும் கிராமம். இங்கே சுமார் 350 வருடப் பழைமை வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது.

மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக, கருணையும் அருளும் பொழியும் அன்னையாக எல்லோராலும் வணங்கப்படும் அம்மன் கோயிலில், மூன்று அம்மன்கள் ஒருசேர இருப்பது சிறப்பான ஒன்று என்று சொல்லிப் பூரிக்கிறார்கள் கிராம மக்கள்.

சந்தனமாரியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாரம்மன் எனும் மூன்று அம்மன்களும் உருவமில்லாமல் பீடமாக இருந்து அருள்பாலித்து வந்தார்கள்.  இப்போது மூன்று தேவியருக்கும் சிலை திருமேனி செய்யப்பட்டு, பிரதிஷ்டை செய்து, கும்பாபிஷேகப் பெருவிழாவும் நடத்தப்படுகிறது.

வருகிற 10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாளைய தினம் காலை 9 முதல் 10.30 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, கடந்த வியாழக்கிழமை மாலையில் இருந்தே யாக சாலை பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

பிறகு வெள்ளிக்கிழமையான 8ம் தேதி மாலையில் இரண்டு கால யாக பூஜைகள் நடந்தன. யாக சாலை பூஜைகள் மற்றும் கும்பபிஷேகப் பெருவிழாவை பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் நடத்தித் தருகிறார். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நவாபரண பூஜையை பரணிகுமார் சுவாமிஜி நடத்துகிறார். வெள்ளிக்கிழமை நவாபரண பூஜை சிறப்புறச் செய்து கொடுத்தார்.

நரசன் விளை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் இஷ்டதெய்வமாகத் திகழும் சந்தனமாரியம்மன், உச்சினி மாகாளியம்மன், முத்தாரம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்துக்கு ஏராளமான பக்தர்கள் இப்போதே வரத்தொடங்கிவிட்டார்கள்.

விழா ஏற்பாடுகளை, கோயில் கமிட்டியினரும் ஊர்மக்களும் இணைந்து செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x