தஞ்சை பெரியகோயில் 1039-வது சதய விழா - பந்தக்கால் நடும் நிகழ்வுடன் இன்று தொடக்கம்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் 1039வது மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழாவை ஒட்டி பந்தக்கால் முகூர்த்த விழா இன்று நடந்தது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்தநாள் விழா சதயவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு 1039 ஆவது சதய விழாவை முன்னிட்டு பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.

முன்னதாக பந்தக்காலிற்கு சந்தனம், தயிர், பால், திரவிய பொடி உட்பட பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

விழாவில் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி.பாபாஜி ராஜா போன்ஸ்லே, சதய விழா குழு தலைவர் து. செல்வம், துணைத் தலைவர் எஸ்.சி. மேத்தா, உறுப்பினர் ராமநாதன், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், வெற்றி தமிழர் பேரவை ரா. செழியன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in