Published : 13 Jun 2018 05:33 PM
Last Updated : 13 Jun 2018 05:33 PM

வார ராசிபலன் 14.06.2018 முதல் 20.06.2018 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷ ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். உத்தியோகத்தில் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள்.

குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கலைத் துறையினர் இரவுபகலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். பெண்களுக்கு, எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மாணவர்களுக்கு, பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கல்வியில் வெற்றி பெறப் பாடுபடுவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு

நிறங்கள்: வெள்ளை, சிவப்பு | எண்கள்: 1, 3, 6, 9

பரிகாரம்: துர்க்கையை வணங்க மன அமைதி கிடைக்கும்.

 

ரிஷப ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். ஆக்கப்பூர்வமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கித் தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினத்தவரால் காரிய  அனுகூலம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் மேலதிதிகாரிகளுடன் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன் மனைவிக்குள் சகஜநிலை இருக்கும். உறவினர்கள் வருகை இருக்கும். கலைத் துறையினருக்கு வாய்ப்புகள் இருந்தாலும் உடல்நலம் ஒத்துழைக்காமல் போகலாம். அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றத்தில் தடைகள் இருக்கும். பொறுமையாகக் கையாள்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். பெண்களுக்கு, செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். மாணவர்கள், கல்வியில் வெற்றி பெறக் கூடுதல் கவனம் செலுத்திப் பாடங்களைப் படிப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வெள்ளி

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: வெள்ளை | எண்கள்: 2, 6, 9

பரிகாரம்: விநாயகப் பெருமானை தீபம் ஏற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும்.

 

மிதுன ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் புதன் சஞ்சாரத்தால் எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணியக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணம் அதிகரிக்கும். உங்களது செயல்களால் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாசப் பயணங்களும் செல்ல நேரலாம். தொழில், வியாபாரத்தில் அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். உத்தியோகத்தில், முன்னேற வாய்ப்புகள் வரும்.

புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு நன்மையான வாரமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு, உற்சாகமாகப் பணிகள் இருக்கும். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பெண்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டு காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மாணவர்கள், கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன்

திசைகள்: மேற்கு, வடமேற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு | எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: ஆஞ்சனேயரை புதன்கிழமை அன்று வெண்ணெய் சாற்றி வணங்க கஷ்டங்கள் தீரும். தைரியம் கூடும்.

 

கடக ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசியை செவ்வாய் பார்க்க, சுக்கிரன் அலங்கரிக்க காரியங்களில் தடை, தாமதம் நீங்கும். எதிலும் இருந்து வந்த மந்தமான சூழ்நிலை மாறும். மனக்குழப்பம் நீங்கும். வராமல் நின்ற பணம் வந்து சேரும். பயணங்கள், சாதகமான பலனைத் தரும். தொழில், வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை தரலாம். உத்தியோகத்தில் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

உறவினர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. கலைத் துறையினர் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அரசியல்வாதிகள் கவனமுடன் செயல்பட்டால் மேலிடத்தின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களை உதாசீனப்படுத்தாதீர்கள்.  பெண்களுக்கு, பணவரத்து திருப்திகரமாக இருக்கும். முழுகவனத்துடன் செய்யும் காரியம் வெற்றியாகும். மாணவர்கள், ஆசிரியர்களின் ஆதரவுடன் கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். விளையாட்டில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், வியாழன்

திசைகள்: வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: வெள்ளை, நீலம் | எண்கள்: 2, 4, 6

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜை செய்து வணங்க சிக்கல்கள் தீரும். மன அமைதி, குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

 

சிம்ம ராசி வாசகர்களே

இந்த வாரம் ராசிநாதன் லாபஸ்தானத்திற்கு மாறுவதால் உங்கள் வாக்கு வன்மை அதிகரிக்கும். எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில், மறைமுக எதிர்ப்புகள் நீங்கி வேலைகளில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். கலைத் துறையினருக்கு நிலுவையில் உள்ள காரியங்கள் சிறப்பாக முடிய வழிபிறக்கும். அரசியல்வாதிகள், மக்கள் பிரச்சினைகளை நேரடியாகச் சந்திக்க நேரிடும். பெண்களுக்கு, செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு, கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.

 

கன்னி ராசி வாசகர்களே

இந்த வாரம் பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள். அரசுப் பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். தேவையான நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறைந்து காணப்படும். நிலுவைப் பணம் கிடைக்கும். குடும்பத்தில் தேவையானவற்றைச் செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பைப் பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும். கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம். அரசியல்வாதிகளுக்கு, சாதகமான காலகட்டமாக இருந்தாலும் புத்திக்கூர்மையுடன் செயல்களை ஆராய்ந்து செய்வது நன்மை பயக்கும். பெண்களுக்கு, இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு, கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன்

திசைகள்: தெற்கு, தென்மேற்கு

நிறங்கள்: பச்சை, வெள்ளை | எண்கள்: 5, 9

பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்கி வருவது எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.

 

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூடச் சற்றுத் தாமதமாகலாம். ராசியிலிருக்கும் குருவால் மனதில் இருந்த கவலை நீங்கி நிம்மதி கிடைக்கும். அரசுப் பணிகளால் பலன் கிடைக்கும். வெளியூர்ப் பயணத்தால் அலைச்சல் உண்டாகலாம். தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். உத்தியோகத்தில், மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் அனுசரித்துச் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். கலைத் துறையினருக்குத் தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு, எளிதில் முடிய வேண்டிய காரியம் கூடத் தாமதமாகலாம். மாணவர்களுக்கு, கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 4, 6, 9

பரிகாரம்: கருடாழ்வாரை தீபம் ஏற்றி வணங்க மனதைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்துக்கு விரோதமாகக் காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசை தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களை அனுசரித்துச் செல்ல வேண்டும். குடும்பம் குறித்த கவலைகள் நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும்.

சகோதரர்கள், உறவினர்களிடம் பேசும்போது கவனம் தேவை. கலைத் துறையினர் தொழிலில் அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான பொருளாதாரமும் புகழும் பெறுவார்கள். அரசியல்வாதிகள், நற்செயல்களால் உயர்வைப்பெற்று புகழ் பெறுவீர்கள் பெண்கள், எந்த ஒரு செயலையும் யோசித்துச் செய்வது நல்லது. மாணவர்கள், கல்வியில் வெற்றி பெறத் திட்டமிட்டு பாடங்களைப் படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: வடக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். எல்லாவகையிலும் லாபகரமான காலகட்டம் இது. கடன், நோய்கள் தீரும். நட்பு வகையில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. தொழில், வியாபார விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத் துறையினர் தங்கள் திறமையை  நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள். அரசியல்வாதிகள், உத்வேகத்துடன் பணியாற்றுவார்கள். பெண்கள், நன்மை தீமை பற்றிக் கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு, பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாகப் படிப்பீர்கள். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 1, 3, 6

பரிகாரம்: ருத்திரமூர்த்தியை ஞாயிற்றுக்கிழமை அன்று வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் புத்தி சாதுரியமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களைப் பற்றி கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். பேச்சாற்றலால் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதைக் கேட்டுத் தடுமாற்றம் அடையலாம். குடும்பத்தில் சில விஷயங்கள் உங்கள் கோபத்தைத் தூண்டலாம்.

வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாகப் பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மத்தியில் பழைய பகை மாறும். கலைத் துறையினருக்கு, தொழில் வாய்ப்புகள் வந்து வருமானம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுத்தர எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். பெண்கள், அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்கள், எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்:  2, 3, 5

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமை அர்ச்சனை செய்து வழிபட்டால் பிரச்சினைகள் தீரும்.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாகச் செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள்.

கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம்விட்டுப் பேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். கலைத் துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல்வாதிகள் தேவையற்ற அலைச்சலைக் குறைத்துக் கொள்வது நல்லது. சூரியனின் ஐந்தாமிடச் சஞ்சாரம் உதவிகளைச் செய்ய தூண்டும். பெண்களுக்கு, எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு, செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களைப் படிப்பது நல்லது.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: சரஸ்வதி தேவதையைப் பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தவருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஊழியர்களால் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில், எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். எதிர்பாராத இடமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.

குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். கலைத் துறையினருக்கு நிலுவையிலிருந்த காரியங்கள் சிறப்பாக முடிய வழி பிறக்கும். அரசியல்வாதிகளுக்கு, மக்கள் தொடர்பான பிரச்சினைகளை நேரடியாகத் தலையிட்டுத் தீர்ப்பீர்கள். பெண்களுக்கு, திறமையான பேச்சினால் ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு, பாடங்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, வெள்ளை | எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x