இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலையில் அக்.3 முதல் நவராத்திரி விழா

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலையில் அக்.3 முதல் நவராத்திரி விழா
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழா கொண்டாட்டம் அக்.3 முதல் 12-ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இந்தாண்டு நவராத்திரி பெருவிழா, திருக்கோயில்கள் சார்பில் சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் அக்.3 முதல் 12-ம்தேதி வரை 10 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக அக்.3-ம்தேதியன்று சகலகலாவல்லி மாலை வழிபாடு மற்றும் திரைப்பட பின்னணி பாடகி மாலதி மற்றும் முகேஷ் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கிறது.

தினந்தோறும் ஒரு வழிபாட்டுடன் கலைமாமணி வீரமணி ராஜு மற்றும் அபிஷேக் ராஜு குழுவினர், பின்னணி பாடகர் டாக்டர் வேல்முருகன், இறை அருட்செல்வி தியா, செல்வன் சூரிய நாராயணன் ஆகியோரின் பக்தி இசையும், மீனாட்சி இளையராஜா குழுவினரின் கிராமிய பக்தி இசை, தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திருக்கோயில்கள் சார்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் தவத்திரு ஆதீன பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், இறையன்பர்கள் கலந்துகொண்டுசிறப்பிக்கவுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in