

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், திருக்கார்த்திகை திருவிழா டிச.1-ம் தேதி தொடங்குகிறது. மகா தேரோட்டம் டிச.10-ம் தேதி நடை பெறவுள்ளது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்வானதிருக்கார்த்திகை தீபம் டிச.13-ம் தேதிஏற்றப்படவுள்ளது. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள பந்தக்கால் முகூர்த்தம் அண்ணாமலையார் கோயிலில் நேற்று நடைபெற்றது. கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவர், உண்ணாமுலை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, சம்பந்த விநாயகர் சந்நிதி முன்பு பந்தக்காலுக்கு சிறப்புஅபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து, ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி பந்தக்காலை நட்டனர். பின்னர், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.