சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு; சமத்துவ விருந்து

சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு; சமத்துவ விருந்து
Updated on
1 min read

சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை ஒட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இன்று (ஆக.15) சென்னையில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நடைபெற உள்ளது. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் மாதவப் பெருமாள் கோயில்,மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், வடபழனி முருகன் கோயில், வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், தம்புசெட்டி தெரு காளிகாம்பாள் கோயில், கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சென்னையில் உள்ள 31 கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் சமத்துவ விருந்து நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடும் அதனைத் தொடர்ந்து 12 மணி முதல் சமத்துவ விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்,அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு, சிவ.வீ.மெய்யநாதன், கே.என்.நேரு, இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன்,தங்கம் தென்னரசு உள்ளிட்ட அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in