Published : 24 May 2018 10:38 AM
Last Updated : 24 May 2018 10:38 AM

வார ராசிபலன் 24.05.2018 முதல் 30.05.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம் ராசி வாசகர்களே

இந்த வாரம் எதிலும் பதற்றத்தைத் தவிர்த்து நிதானத்தைக் கடைபிடியுங்கள். சில விரயங்கள் ஏற்பட்டாலும் சுபச்செலவுகள் தொடர்பானதாகவே இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சுபகாரியங்கள் லகுவாகக் கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டுக்குச் செல்வது தள்ளிப்போகலாம். உத்தியோகஸ்தர்கள், வெளிநாட்டில் பணியாற்றுபவர்களுக்கு அரசு அனுகூலம் உண்டு. தொழிலில் தன்னம்பிக்கை, திறன் அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும்.  இல்லத்தில் அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். கலைத் துறையினருக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு, விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்கள் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும். மாணவமணிகள், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு தெரியும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, தெற்கு

எண்கள்: 2, 5, 6 | நிறங்கள்: வெள்ளை

பரிகாரம்: வேல்முருகனை வழிபட குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

 

விருச்சிக ராசி வாசகர்களே

இந்த வாரம் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள். உங்கள் யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். ஆலயச் சடங்குகள், சம்பிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். மேலிடத்தில் அதிகாரிகள் உங்களுக்கு அனுசரனையாக நடந்து கொள்வார்கள். தொழில்துறையாளர்களுக்கு கடுமையான பணி இருக்கும். வேலையாட்கள் அமைதியாகப் போவார்கள்.

பெண்கள், எதிர் விளைவுகளை  முன்கூட்டியே யோசித்து வார்த்தைகளை எச்சரிக்கையாக வெளியிடுங்கள். கலைத் துறையினருக்கு நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகும். சிலருக்குப் புதிய சொத்துக்கள் வாங்கும் பாக்கியம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு, புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும். எதிரிகள் விலகிச்செல்வார்கள். மாணவர்கள் கேளிக்கைகளில் ஈடுபடும் போது எச்சரிக்கை தேவை. 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, கிழக்கு

எண்கள்: 3, 9 | நிறங்கள்:சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: தினமும் சிவன் கோவிலுக்குசென்று, தீபமேற்றி  வர நன்மைகள் நடக்கும்.

 

தனுசு ராசி வாசகர்களே

இந்த வாரம் தடைபட்டிருந்த அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நடைபெறும். வெள்ளை உள்ளத்துடன் உலவும் உங்களுக்கு ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் நடக்கும் . சுற்றியிருக்கும் சோம்பேறிகளிடமிருந்து உங்களை நீங்கள் விலக்கிக் கொள்ளுங்கள். உங்கள் நியாயம் ஓங்கும். பிள்ளைகள் வழியில் மட்டற்ற மகிழ்ச்சிகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள், புதிய வழக்குகளைச் சந்திக்க நேரிடலாம்.  வேலை நிமித்தமாக வெளிநாட்டுக்குப் பயணம் செல்ல வேண்டி வரலாம்.  தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும்.

சகோதரரின் வெளிநாட்டுப் பயணம் இனிதே நடைபெறும். தைரியம் பளிச்சிடும். பெண்களுக்கு, திருமண கைகூடி வரும். கலைத் துறையினர் பொறுமையுடன் செயல்பட வேண்டும். மறைமுகப் போட்டிகளால் நெருக்கடிகளைச் சந்திக்கலாம். அயல்நாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு, சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் பெறுவார்கள். மேலிடத்துடன் கருத்து மோதல்கள் நீங்கும். மாணவர்களுக்கு, படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். நினைத்த மதிப்பெண் கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, வியாழன்

திசைகள்: கிழக்கு, தெற்கு

எண்கள்: 1, 3 | நிறங்கள்:மஞ்சள், சிவப்பு

பரிகாரம்: லக்ஷ்மி நாராயணரை வழிபடுவது நல்லது. பசுவிற்கு ஆகாரம் கொடுப்பது நல்லது.

 

மகர ராசி வாசகர்களே

இந்த வாரம் சாதனைகள் புரிவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும்.  அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.  உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறன் அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் தொடர்பான பிரச்சினைகள் தீரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டிய காலமிது. பெண்கள், அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள்.

பெரியோர்களை ஆலோசனைகள் கேட்டே எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும். மாணவர்களுக்கு, எதிர்காலப் படிப்புக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: தெற்கு

எண்கள்: 5, 6, 9 | நிறங்கள்:நீலம், பச்சை

பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.

 

கும்ப ராசி வாசகர்களே

இந்த வாரம் எதைத் தொட்டாலும் வெற்றிக்கனியை ருசிப்பீர்கள். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷத் தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவு வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும்.  உங்கள் அந்தஸ்தும் சமுதாயத்தில் உயரும். வெளிநாட்டுக்குச் செல்ல முயற்சி செய்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது. தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூரப் பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்களால் பெருமை சேரும்.

பெண்களுக்கு, தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சில வாக்குவாதங்கள் ஏற்படும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. அரசியல்வாதிகள், விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: மேற்கு, வடக்கு

எண்கள்: 5, 6 | நிறங்கள்:வெளை, பச்சை

பரிகாரம்: துர்க்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.

 

மீன ராசி வாசகர்களே

இந்த வாரம் குடும்பச்சூழலில் தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வந்து சேரும். ஆனால் சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டிச் செல்வீர்கள். சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். உத்தியோகஸ்தர்கள், எந்த தடங்கல்களையும் கடந்து சாதிப்பீர்கள். தெய்வ பலத்துடன் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நூதனப் பொருட்கள் சேரும். வியாபாரம் அபிவிருத்தியாகும்.  பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நன்மை தரும்.

பெண்களுக்கு, பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம். பாகப் பிரிவினை தொடர்பான பஞ்சாயத்துகள் தீரும். கலைத் துறையினருக்கு, பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறையில் உள்ளவர்களுக்குப் புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் இருப்பை மேலிடத்தில் உணர்த்துவதற்கு ஏற்ற காலகட்டம் இது. புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்கு, தேர்வில் நல்ல முடிவு கிடைக்கும்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன்

திசைகள்: வடக்கு, மேற்கு

எண்கள்: 3, 9 | நிறங்கள்:சிவப்பு, மஞ்சள்

பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடும் சித்தர்கள் வழிபாடும் நன்மை தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x