

திருமண பொருத்தங்களில் ‘நாடி'ப் பொருத்தம் என்ற பொருத்தமும் பார்க்கப்படுகிறது.
அது என்ன நாடி? நாடி என்றால் சேர்க்கை என்று அர்த்தம். அதாவது இரு பொருள்கள் இணையும் போது ஒரு அதிர்வு உண்டாகும் அல்லவா! அந்த அதிர்வுதான் நாடி என்பதாகும்.
இது வாதம், பித்தம், கபம் என்னும் மூவகை நாடியும் ஜோதிடத்தில் பார்ச்சுவ நாடி, மத்ய நாடி,சமான நாடி என்ற பெயரில் உள்ளன.
இது திருமணப் பொருத்தத்தில் என்ன செய்யும்?
அதற்கு முன்பாக உங்கள் நட்சத்திரம் என்ன நாடி என்று பார்ப்போம்.
வாதம்(பார்ச்சுவநாடி) :- அசுவினி,திருவாதிரை,புனர்பூசம்,உத்திரம்,அஸ்தம்,கேட்டை,மூலம்,சதயம்,பூரட்டாதி.
பித்தம்(மத்யநாடி)பரணி,மிருகசீரிடம்,பூசம்,பூரம்,சித்திரை,அனுசம்,பூராடம்,அவிட்டம்,உத்திரட்டாதி.
கபம்(சமானநாடி)கார்த்திகை,ரோகினி,ஆயில்யம்,மகம்,சுவாதி,விசாகம்,உத்ராடம்,திருவோணம்,ரேவதி.
ஆண் பெண் இருவரின் தேகம் எந்த வகை என்பதைக் காட்டுவது நாடி.
இருவரும் பித்த நாடி ஆயின் இருவருக்கும் தேகமானது அதீத உஷ்ணமாக இருக்கும். அப்படி இருக்க ஆணின் விந்துவானது பலமிழந்து நீர்த்துப் போகும். இதனால் புத்திரபாக்யம் தாமதமாகும்.
மேலும் உடல் எரிச்சலைத் தரும். விரைவில் தாம்பத்திய நாட்டத்தைக் குறைக்கும்.
இருவரும் வாத நாடி ஆயின் ஓரளவு நன்மை உண்டாகும். இருவரும் வாயுத் தன்மை ஆதலால் பெரிய பாதிப்பு தராது. ஆனால் இருவரின் உடல்கூறும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தாம்பத்ய பிடிமானம் இல்லாமல் போகும்.
இருவரும் கபநாடி ஆயின் மிக நன்மை. எந்தப் பாதிப்பும் தராது, உன்னதமான தாம்பத்யம் உண்டுபண்ணும்.
ஆகவே, வாதம்( பார்ச்சுவ) நாடிக்கு :- பித்தம்( மத்ய) கபம்(சமான) இணைக்கலாம்.
பித்தநாடிக்கு(மத்தியநாடி) வாதம் கபம் இந்த இரண்டும் இணையலாம்.
கபம் (சமான) நாடிக்கு எந்த நாடியையும் இணைக்கலாம். தடையேதும் இல்லை.
எனவே நாடியும் திருமணப் பொருத்தத்தில் ஒரு முக்கிய பங்கு என்பதை அறிந்து கொள்ளலாம்.
இப்போது பலரும் நட்சத்திர ஆலயம் எது என்பதை அறிய ஆவலாகவும், பலர் என்னிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபடியும் உள்ளனர் அவர்களுக்காக:-
அசுவினி:- சரஸ்வதி -கூத்தனூர்
பரணி :-துர்கை-பட்டீஸ்வரம்
கார்த்திகை:- அக்னி -திருவண்ணாமலை
ரோகிணி:-பிரம்மா-திருப்பட்டூர்
மிருகசீரிடம்:-சந்திரன்-திங்களூர்,திருப்பதி
திருவாதிரை:-நடராஜர் -சிதம்பரம்
புனர்பூசம்:-அதிதி-வாணியம்பாடிஅதிதீஸ்வர்ர்
பூசம்:-குரு-திருசெந்தூர் ,குருவாயூர்
ஆயில்யம்:-ஆதிசேஷன்ஶ்ரீரங்கம்
மகம்:-பித்ருக்கள்(முன்னோர்வழிபாடு)சுக்கிரன்-கஞ்சனூர்
பூரம்:-பார்வதி-சிவாலயம்-ஶ்ரீவில்லிபுத்தூர்
உத்திரம்:-சூரியன்:-சூரியனார்கோவில்
அஸ்தம்:- சாஸ்தா -ஐயப்பன்,ஐயனார்
சித்திரை:-விஸ்வகர்மா-தேவதச்சன்(படம்கிடைக்கும்)
சுவாதி:- வாயுபகவான்-குருவாயூர்
விசாகம்:- முருகன்
அனுசம்:-ஶ்ரீலக்ஷ்மிஅலமேலுமங்காபுரம்
கேட்டை:- இந்திரன் - பெளர்ணமிபூஜை
மூலம்:-நிருதி—குபேரன்வழிபாடு,அனுமன்வழிபாடு
பூராடம்:- வருணன்
உத்திராடம்:- கணபதி
திருவோணம் :-திருமலைதிருப்பதி
அவிட்டம்:-வசுக்கள்-பைரவவழிபாடு
சதயம்:-யமன்-திருபைஞ்ஞீலி (எமனுக்குஉயிர்மீண்டதலம்)
பூரட்டாதி:-குபேரன்(தீபாவளிஇரவுபூஜைசெய்யநன்மை)
உத்திரட்டாதி:-காமதேனு:- கோபூஜை, பசுவழிபாடு
ரேவதி:- சனிபகவான்
உங்கள் நட்சத்திர ஆலயங்களுக்குச் சென்று உங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் நட்சத்திர நாளில் சென்று வணங்குவது கூடுதல் சிறப்பு. விசேஷம். விசேஷ பலன்களைத் தந்தருளும்.
இதன் அடுத்த அத்தியாயம் வரும் 23.5.18 புதன்கிழமை அன்று வெளியாகும்.
ஜோதிடரைத் தொடர்பு கொள்ள: 98841 60779
தெளிவோம்