Published : 03 May 2018 11:09 AM
Last Updated : 03 May 2018 11:09 AM

வார ராசிபலன் 03.05.2018 முதல் 09.05.2018 வரை (துலாம் முதல் மீனம் வரை)

துலாம்

இந்த வாரம் தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும்.  அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு இடமாற்றமும் வரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் கைகூடாவிட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற  வேண்டி வரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். தொழில் வெற்றியடையும்.

பெண்கள், அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். பெரியோர்களை ஆலோசனைகள் கேட்டு எதையும் செய்வது நல்லது. கலைத் துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும். அரசியல்வாதிகளுக்குப் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு, மரியாதை கூடும். செல்வாக்கு ஓங்கும். மாணவர்களுக்குப் பொன்னான காலகட்டம் இது. எதிர்காலப் படிப்புக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம் | எண்கள்: 4, 6, 9

பரிகாரம்: கோளறு பதிகம் படிக்க வேண்டும். சிவன் கோயிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்ய வேண்டும்.

 

விருச்சிகம்

இந்த வாரம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவு வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில்  குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். அயல்நாட்டுப் பயணங்களை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. வேலை வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்கள், தாய், தாய்வழி உறவினர்களால் நம்பிக்கை பெறுவீர்கள்.

அழகிய பெரிய வீடும், விலையுயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சியடைவீர்கள். கலைத் துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாகத் தலையிட வேண்டாம். அரசியல்வாதிகள், விடாப்பிடியாகச் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். மாணவர்கள் படிப்பில் சாதனை புரிவார்கள்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: சிவப்பு, நீலம், பச்சை | எண்கள்: 3, 6, 7

பரிகாரம்: துர்க்கையை வழிபட வேண்டும்.

 

தனுசு

இந்த வாரம் குடும்பத்தில் நெருக்கடியான சூழ்நிலை மாறி பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் கைக்கு வரும். சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே முழுமையான பலன் கிடைக்கும். சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும். உத்தியோகஸ்தர்கள், எந்தத் தடங்கல்களையும் சமாளிப்பீர்கள். தெய்வ பலம் இருக்கும். வசதி, வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் நூதனப் பொருட்கள் சேர்க்கை உண்டு. வியாபாரம் அபிவிருத்தியாகும்.  பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது நன்மை தரும். பெண்களுக்குக் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டு. பிள்ளைகளுக்காகப் புதிய கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் வரலாம்.

அரசல்புரசலாகத் தங்களைக் கேலி பேசியவர்கள் கூட தங்களது தவறான போக்கை மாற்றிக் கொள்வார்கள்ர். கலைத் துறையினருக்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் சஞ்சாரத்தால் இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு, தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற நேரம் இது. புதிய உத்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்களுக்குத் தேர்வில் நல்ல தேர்ச்சி கிடைக்கும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, வடக்கு

நிறங்கள்: சிவப்பு, மஞ்சள் | எண்கள்: 3, 5, 6

பரிகாரம்: முன்னோர்கள், சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்.

 

மகரம்

இந்த வாரம் குடும்பப் பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். குறையாக நின்ற பணிகள் இனி சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல் ஒழுங்காக இருக்கும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் வந்து சேரும்.  உத்தியோகஸ்தர்கள், மேலதிகாரிகள் உங்களை நம்பிப் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் சோர்வும், மனக்குழப்பமும் மறையும். இதனால் தோற்றத்தில் பொலிவு உண்டாகும். புதிய குத்தகைகளில் லாபம் கொட்டும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும்.  பெண்களிடம் சக ஊழியர்கள் பகை மறந்து நட்பு பாராட்டுவார்கள்.

தந்தையின் செல்வாக்கால் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். கலைத் துறையினர், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்குப் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். ஆன்மிக நாட்டமும், தைரியமும் அதிகரிக்கும். மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். 

அதிர்ஷ்டக் கிழமைகள்: செவ்வாய், வியாழன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்:சிவப்பு, வெள்ளை | எண்கள்:  2, 3, 5

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

 

கும்பம்

இந்த வாரம் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள நேரலாம். ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.  உங்களின் எண்ணங்களும், செயல்களும் உங்களுக்கு வாழ்வில் உயர்ந்த இடத்தைப் பெற்றுத் தரும். உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளைத் தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை, சில நேரங்களில் உருவாகலாம். அலுவலகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்று நடத்த வாய்ப்பு உருவாகும்.  விவசாயிகளுக்கு லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தைச் சீரமைப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையும். வங்கிக் கடன் கிடைக்கும். பெண்களுக்கு சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும்.

இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். கலைத் துறையினர் உற்சாகமாகச் செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பதவி, பொறுப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகள், மனதிருப்தியுடன் காரியங்களைச் செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மனதுக்குப் பிடித்தவர்களை சந்திக்கலாம். பெரியவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். மாணவர்கள், யாரையும் ஒப்பிட்டு பேச வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, மேற்கு

நிறங்கள்: வெள்ளை, பச்சை | எண்கள்: 5, 6, 9

பரிகாரம்: முன்னோர்கள் வழிபாடு தேவை. நவக்கிரகங்களை வலம் வரவேண்டும்.

 

மீனம்

இந்த வாரம் சிலர் விரும்பிய வீட்டுக்குக் குடிபெயர்வார்கள். தக்கச் சமயத்தில் உயர்ந்தவர்களின் நட்பைப் பெற்று கவுரவம் பாதுகாக்கப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் இருக்கும். வியாபாரிகள் போட்டி, பொறாமைகளைச் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்கள் சமயோஜிதப் புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பெண்களுக்கு,  உற்றார் உறவினர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கலைத் துறையினர் எடுத்தக் காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். அரசியல்வாதிகளுக்கு, வீண் அலைச்சலும், மனச்சோர்வும் உண்டாகும். மேலிடத்தின் செயல்கள் நிம்மதியைப் பாதிக்கும். மாணவர்கள் படிப்பில் கவனச் சிதறல் வேண்டாம். கேளிக்கைகளில் கவனத்தைச் சிதறவிட வேண்டாம்.

அதிர்ஷ்டக் கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

திசைகள்: கிழக்கு, தெற்கு

நிறங்கள்: சிவப்பு,வெள்ளை | எண்கள்: 3, 5, 7

பரிகாரம்: காக்கைக்குத் தினமும் சாதம் வைத்தல் நல்லது. தினமும் ராமர் கோயிலுக்குச் சென்று வரவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x