Published : 04 Apr 2014 02:52 PM
Last Updated : 04 Apr 2014 02:52 PM

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மோடி குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; ஏன் அந்த கட்சியிலேயேகூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் சந்திரபூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி நடத்தும் 10 மாநிலங்களில் ஏழு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள் ளதாக தேசிய குற்றப் பதிவேடு மையம் சுட்டிக் காட்டியுள்ளது. இந்த வரிசையில் பாஜக ஆளும் மாநிலங்கள் ஒன்றுகூட இல்லை.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை. ஏன் காங்கிரஸ் கட்சியில்கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

அண்மையில் நாளிதழ்களில் வெளியான ஒரு செய்தி மிகவும் அதிர்ச்சிகரமாக இருந்தது. காங்கிரஸ் பெண் தொண்டர் ஒருவர் திடீரென காணாமல் போய்விட்டார். சில நாள்களுக்குப் பின்னர் அவர் சடலமாக மீட்கப் பட்டார். இதுதொடர்பாக உள்ளூர் இளைஞர் காங் கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியிலேயே பெண் களுக்குப் பாதுகாப்பு இல்லை. அப்படியென்றால் இந்த நாட்டுப் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?

நிர்பயா நிதி எங்கே?

கடந்த 2012 டிசம்பர் 16-ம் தேதி டெல்லியில் பஸ்ஸுக்காக காத்திருந்த மருத்துவ மாணவி 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்காக நிர்பயா நிதியத்தை மத்திய அரசு அறிவித்தது. அந்த நிதியத்துக்கு ரூ.1000 கோடியை ஒதுக்கியது. ஆனால் அந்தத் தொகையில் இதுவரையில் ஒரு ரூபாய்கூட செலவு செய்யப்படவில்லை என்று நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.

1995-ல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் நைனா சஹானி கொல்லப்பட்டார். இது தொடர்பாக அவரது கணவரும் டெல்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுஷில் சர்மா கைது செய்யப்பட்டார். மேலும் 1984-ல் நாக்பூரில் காங்கிரஸ் மாநாடு நடை பெற்ற போது காங்கிரஸ் தொண்டர்கள் அங்கிருந்த கடை களை கொள்ளையடித்தனர். இந்தச் சம்பவங்களை மோடி தனது பேச்சின்போது சுட்டிக் காட்டினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x