Last Updated : 11 Apr, 2018 09:57 AM

 

Published : 11 Apr 2018 09:57 AM
Last Updated : 11 Apr 2018 09:57 AM

ஜோதிடம் அறிவோம்! 30: இதுதான்... இப்படித்தான்! குலதெய்வ வழிபாடு முக்கியம்!

சென்ற பதிவில், புத்திர தோஷம் குறித்தும் பரிகாரங்கள் குறித்தும் சொல்லியிருந்தேன். இன்னும் சில பரிகாரங்களைத் தாங்களேன் என்று பலரும் கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது. முந்தைய பதிவுகளைப் படியுங்கள். அதில் நான் நிறைய பரிகாரங்களை விளக்கியிருக்கிறேன், அதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்... நல்லதே நடக்கும்.

இஷ்ட தெய்வமாக எந்தக் கடவுளை வேண்டுமானாலும் வழிபடுங்கள். சதாசர்வ காலமும் அந்த இஷ்டதெய்வம் குடிகொண்டிருக்கும் ஆலயத்துக்குச் சென்று வாருங்கள். வழிபடுங்கள். நேர்த்திக்கடன் செலுத்துங்கள். அதேசமயம், முக்கியமாக ஒரு வழிபாட்டை, ஒரு தெய்வத்தை மறக்கவே மறக்காதீர்கள்.

அதுதான் குலதெய்வம்... குலதெய்வ வழிபாடு. குலதெய்வ வழிபாடு என்பது மிக மிக முக்கியம். எந்தப் பரிகாரங்கள் செய்வதாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் அனுமதி பெறவேண்டும்.

உங்கள் வழிபாட்டு முறை எப்படியோ அதன் வழிமுறையில் பூஜை செய்த பின் பரிகாரங்களைத் தொடருங்கள். வெகு சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும் என்பது உறுதி.

ஒருவர் தன் குலதெய்வத்தை 13 தலைமுறைக்கு மேல் தொடர முடியாது என்பதை அறிவீர்களா?

இதன் விபரத்தை நான் முன்பே விளக்கியிருந்தேன். மீண்டும் ஒரு முறை நினைவூட்டுகிறேன்.

எவர் ஒருவருக்கு ஆண் வாரிசு இல்லாமல் பெண் குழந்தை மட்டும் இருக்கிறதோ... அவரோடு அந்த குலதெய்வமும் குலதெய்வ வழிபாடும் முடிந்து விடுகிறது.

அல்லது வாரிசே இல்லாமல் போனாலும் குலதெய்வ வழிபாடு முடிவுக்கு வந்துவிடும்.

மேலே சொன்ன இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.

குலதெய்வ வழிபாடு “முறையாக செய்யாமல் போனால்” ஆண் வாரிசு இருக்காது.

குலதெய்வத்தை “மறந்தே போனாலும், அல்லது தெரிந்தே வணங்காமல் போனாலும்” வாரிசே இல்லாமல் போகும்.

இல்லை என் தந்தைதான் மறந்துவிட்டார். நான் தேடிப்பிடித்து வணங்கிவருகிறேன் என்பவர்களுக்கு... “முன்னோர் செய்த குற்றம் வாரிசுகளை வந்து சேரும்” என்பது விதி. ஆகவே அது மாறாது, மாற்றமுடியாது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனவே குலதெய்வத்தை மறக்காமல் வணங்குவதே புத்திரபாக்கியத்தை உறுதி செய்யும் என்பதை உணர்ந்து, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

இனி நாம் நட்சத்திரங்களை பற்றிய விபரங்களைப் பார்க்கலாம்,

இதுல என்ன சார் இருக்கு? என் நட்சத்திரம் எனக்குத் தெரியும், கோயிலுக்குப் போகும் போது அர்ச்சனை செய்வேன். திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கும் நிகழ்வுக்கு நட்சத்திரம் உபயோகப்படும்.

அதைத் தவிர, வேறென்ன பார்க்க முடியும்? என்பவர்களுக்கு...

இந்தத் தொடரில் நீங்கள் ஆச்சரியப்படும் அளவில் “நட்சத்திரங்களில் இவ்வளவு விஷயம் இருக்கா... என மெய்ம்மறக்கப் போகிறீர்கள்!

சிறிய உதாரணத்தோடும் அடுத்த பதிவு வரும்வரை இதைச் சோதித்து பார்க்கும் வகையிலும், சில குறிப்புகளைத் தருகிறேன்.

அதைப் பயன்படுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு உங்கள் பதிலை கமெண்டில் பதிவு செய்யுங்கள்.

நட்சத்திரப்பட்டியல்

1) அஸ்வினி

2) பரணி

3) கார்த்திகை

4) ரோகிணி

5) மிருகசீரிடம்

6) திருவாதிரை

7) புனர்பூசம்

8) பூசம்

9) ஆயில்யம்

10) மகம்

11) பூரம்

12) உத்திரம்

13) அஸ்தம்

14) சித்திரை

15) சுவாதி

16) விசாகம்

17) அனுசம்

18) கேட்டை

19) மூலம்

20) பூராடம்

21) உத்ராடம்

22) திருவோணம்

23) அவிட்டம்

24) சதயம்

25) பூரட்டாதி

26) உத்திரட்டாதி

27) ரேவதி

28- வதாக ஒரு நட்சத்திரம் உண்டு. தெரியுமா உங்களுக்கு? அதைப் பிறகு பார்ப்போம்.

இப்போது சிறு தகவல் அல்லது குறிப்பு:-

உங்கள் நட்சத்திரம் எதுவோ அதற்கு அடுத்த நட்சத்திர நாட்களில் நீங்கள் எடுக்கும் எந்த முயற்சியும் முழு வெற்றியை தரும்.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

இதை முயற்சித்துப் பாருங்கள். நீங்கள் உணர்ந்ததைப் பதிலாக பதிவிடுங்கள்.

ஜோதிடரைத் தொடர்பு கொள்ள:98841 60779

அடுத்த அத்தியாயம் வரும் 16.4.18 திங்கட்கிழமை அன்று வெளிவரும்.

- தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x